'அடுத்த ஜனாதிபதி தேர்தலின் கருப்பொருள் 13'
13வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தை முற்றாக ஒழிப்பது என்பதே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் தமது கருப்பொருளாகும் என்று ஹெல உறுமைய தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் அத்துருலிய ரத்ண தேரர் குறிப்பிட்டார்.
மாத்தறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வென்றின் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஹெல உறுமைய, 13வது அரசியல் அமைப்பு சீர்திருத்தை நீக்கவேண்டும் என்பதே தமது கட்சியின் கருப்பொருளாக இருக்கும். ஜனாதிபதியாக யார் போட்டியிட்டாலும் நாங்கள் இதனையே வலியுறுத்துவோம். 13வது அரசியல் அமைப்பு நாட்டுக்கு உகந்தது அல்ல என்பதே எமது கருத்தாகும். Sfm
Post a Comment