Header Ads



ரனவிரு ரியல் ஸ்டார் பாகம் 111


ரனவிரு ரியல் ஸ்டார் பாகம் 111 இன் மாபெரும் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற விமானப்படையைச் சேர்ந்த துசாரிபெரேராவுக்கு மில்லியன் கணக்கில் பரிசில்கள் வழங்கப்பட்டன.

உலகிலேயே முதற்தடவையாக இராணுவத்தினருக்காக ஆரம்பிக்கப்பட்ட கலைத்திறமைகளை வெளிக்கொண்டுவரும் ரனவிரு ரியல் ஸ்டார் பாகம் 111 இன் மாபெரும் இறுதிப் போட்டி நேற்று (27) சுகததாஸ உள்ளக அரங்கில் சிறந்த முறையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முப்படைகளினதும் பிரதானிகள்-  ஜனாதி மஹிந்த ராஜபக்ஷ- முதல் பெண்மனி ஷிராந்தி ராஜபக்ஷ ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர். ரனவிரு ரியல் ஸ்டார் நிகழ்ச்சித் திட்டமானது பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் நேரடி வழிகாட்டலின் கீழ் இடம்பெற்றது.

இந் நிகழ்சிக்கு ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் டயலோக் ஆகியன அநுசரணை வழங்கின. மேலும் இந்நிகழ்ச்சியை ரூபவாஹினி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பு செய்யப்பட்டது.

பல சுற்றுக்களிலும் பங்குபற்றி இறுதிப் போட்டிக்காக இராணுவத்தைச் சேர்ந்த மூவரும் கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த தலா ஒவ்வொருவருமாக ஐந்து பேர் தெரிவாகியிருந்தனர்.

இப் போட்டிக்கான வெற்றியாளர்களின் 60 வீத தெரிவை இலங்கை இசைத்துறையைச் சார்ந்த பிரபலமான விசாரதா எட்வெட் ஜயகொடி- ஜக்சன் அந்தனி- மற்றும் யசோதா விமல தர்ம போன்ற நடுவர்களால் தீர்மானிக்கப்பட்டதுடன் மிகுதி 40 வீதத் தெரிவூ பொது மக்களின் எஸ்.எம்.எஸ் குறுந்தகவல் மூலம் தீர்மானிக்கப்பட்டது.

போட்டியின் முதலாவது வெற்றியாளரான விமானப்படையைச் சேர்ந்த துசாரிபெரேராவுக்கு வெற்றிக்கிண்ணத்துடன் ரூபா 20 மில்லியன் பெறுமதியான புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சொகுச் இல்லத்தின் திறப்பு முதற் பெண்மனி ஷிராந்தி ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டது.

இரண்டாவது வெற்றியாளரான தரைப் படையைச் சேர்ந்த கோப்ரல் நதிஸ் சரங்கவுக்கு 6.7 மில்லியன் ரூபா பெறுமதியான புதிய டொயோட்டா யரிஸ் காருக்குறிய திறப்புடன் ஒரு மில்லியன் ரூபாவும் கிண்னமும் அநுசரனைகளுள் ஒருவரான டொயோடா நிறுவனத்தினால் வழங்கப்பட்டது.

மூன்றாவம் நான்காம் வெற்றியாளர்களாக தரைப்படையைச்சேர்ந்த கோப்ரல் சந்திம குமார மற்றும் கோப்ரல் மனோஞ் பெரேரா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

ஐந்தாம் இடத்தை கடற்படையைச் சேர்ந்த தனுக்க ராஜபக்ஷ பெற்றுக்கொண்டார். இவர்களுக்கு பணப் பரிசில்களும் கிண்ணங்களும் வழங்கப்பட்டன.இதற்கும் மேலாக ஆறாம் இடத்திலிலருந்து 36 ஆம் இடம் வரை தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு விசேட பரிசில்கள் படைத்தளபதிகளால் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ- திருமதி.அயோமா ராஜபக்ஷ- படைத்தளபதிகள்- லக்ஸ்மன் ஹுலுகல்ல- டயலோக் நிறுவன அதிகாரிகள்-இலங்கை ரூபவாஹினிக்கூட்டுத்தாபன தலைவர்- அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் புகழ் பெற்ற கலைஞர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.