Header Ads



புதையல் தோண்டிய 10 பேர் கைது

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை மொறவௌ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திம்பிரிவௌ காட்டுப்பகுதியில் வைத்து புதையல் தோண்டிய  10 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி தம்மிக விஐசிங்க தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் முதலாவது சந்தேக நபர் மாதம்பை பகுதியைச்சேர்ந்தவர் எனவும் இவர் முன்னாள் பொலிஸ் சார்ஐன் எனவும் தெரியவருவதுடன் 2001ம் ஆண்டு கொல்லைச்சம்பவத்தில் கடமையில் இருந்து இடைநிறுத்தப்பட்டவர் எனவும் பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணையின் தெரியவருகின்றது. அத்துடன்  32-6677 எனும் இலக்க பஐரோ வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேச மக்கள் வழங்கிய தகவலையடுத்து அக்காட்டு பகுதிக்கு சென்ற பொலிஸாரினால் தண்ணீர் இறைக்கும் இயந்திரம்,மண்வெட்டி, சவல், தண்ணீர் பட்டையுடன் ஊதுபத்திகளும் கைப்பற்றதாகவும் மேலும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் நிட்டம்புவ,லுனுவில,மாதம்மை பகுதிகளைச்சேர்ந்தவர்கள் அடங்குவதாகவும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

திருகோணமலை நீதிமன்றத்திற்கு நாளை ஞாயிற்றுக்கிழமை ஆஐர்படுத்த உள்ளதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி தம்மிக விஐசிங்க மேலும் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.