சவூதி அரேபியாவில் 10,000 இலங்கையர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளார்களாம்..!
சட்டத்திற்கு முரணாக சவுதி அரேபியாவில் தொழில் நிமிர்த்தம் தங்கியுள்ளவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுவதற்கு அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டுமென வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
சவுதியில் வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்புக் கால நிறைவிற்குள் அங்கிருந்து வெளியேறாதவர்கள் 30 இலட்சம் ரூபாவை அபராதமாக செலுத்த வேண்டுமெனவும், இரண்டாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதி இணைப்பதிகாரி மங்கள ரன்தெனிய கூறினார்.
தற்போது சுமார் 10,000 பேர் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளாது சட்டவிரோதமாக சவுதியில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி வரை பொது மன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Nf
Post a Comment