Header Ads



Islamophobia என்றால் என்ன..?

(அஷ்ஷெய்க் MI அன்வர் (ஸலபி)

இன்று இஸ்லாமிய உலகிலும் மேற்கிலும் ஏற்பட்டிருக்கும் நவீன இஸ்லாமிய எழுச்சியின் வேகமான அலைகள் உலக மக்களை அதனை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. குறிப்பாக மேற்குலகில் மிக வேகமாக மனித உள்ளங்களை வசீகரித்து வரும் மார்க்கமாக இஸ்லாம் மாறியிருப்பது அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயங்களையும் விரோதப் போக்காளர்களையும் ஆத்திரம் கொள்ளச் செய்துள்ளது.

இதன் விளைவாக கிறிஸ்தவப் பாதிரிகளும் மேற்குலகின் சில அறிஞர்களும் (?) இஸ்லாம் குறித்து போலியான கருத்தியல்களை முன்வைத்த்தோடு முஸ்லிம்களை கொடூரமானவர்களாகவும் பயங்கரவாதிகளாகவும் காட்ட முனைந்தனர். இவ்வாறான செயற்பாடுகளினால் Islamophobia எனப்படும் கருத்தியல் மேற்குலகால் கட்டமைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக பரபரப்பாக பேசப்பட்டு வரும் இக்கருத்தியல் குறித்த போதிய விளக்கம் எமது சமூகத்தில் முன்வைக்கப்படாமையால் அது பற்றி சிறு விளக்கத்தை இவ்வாக்கத்தின் ஊடாக முன்வைக்க முயற்சிக்கிறேன்.

Islamophobia என்றால் என்ன?

மேற்குலகில் பரவிவருகின்ற அல்லது கட்டமைக்கப்பட்டிருக்கின்ற இஸ்லாமியப் பீதியின் பரிபாஷைக் கருத்தாகவே இது காணப்படுகின்றது. Islamophobia என்ற சொல் பீதி அச்சம் நோய் பயம் போன்ற கருத்துக்களைக் கொண்ட ஒரு கிரேக்க சொல்லாகும். 2011/09/11 இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின் மேற்குலகில் உருப்பெற்ற கருத்தியலாகவும் இதனை அடையாளப்படுத்த்தலாம். 

Islamophobia வானாது முஸ்லிம்களை மதத் தீவிரவாதிகளாகவும் இரக்கம் பண்பாடு என்பனவற்றை அறியாத மனித சமுதாயத்திற்கு எதிரான சமத்துவம்,மன்னிப்பு போன்ற மனித பண்புகளுக்கு விரோதமானவர்களாகவும் சித்தரிப்பதைக் குறிக்கின்றது. 

இவ்வாறான கட்டமைப்பை மேற்கொள்வதன் மூலம் மேற்கு மக்களின் உள்ளங்களில் இஸ்லாம் பற்றிய மோசமான பிம்பங்களை கட்டமைக்கின்றது. முஸ்லிம்களின் உள்ளங்களில் மேற்கை வெல்ல முடியாது, அதனுடன் போராட முடியாது, அது அசைக்க முடியாத சக்தி போன்ற மாயையை உருவாக்குகிறது. இதுதான் நவீன காலப் போர் முறையாகும்.

இஸ்லாம் பற்றிய மேற்குலகின் பார்வை

மேற்கு என்பது ஒரு பிரதேசத்தை பிரதிபலிப்பதல்ல மாறாக அது ஒரு வாழ்க்கை முறையாகும். உலகில் எக்கண்டத்தில் வாழும் எவரேனும் இவ்வாழ்க்கை முறையை பின்பற்றுபவராக இருக்கலாம். அவர் மேற்கத்தேயவாதி என்றே அழைக்கப்படுவார்.

மேற்கு புனித அல்குர்ஆனிய வசனங்களை முற்றாக மறுக்கிறது அதனைப் போலியானது. படைக்கப்பட்டது. ஷைத்தானிய வசனங்கள் என இழிவுபடுத்துகின்றது. இறுதித் தூதர் நபி (ஸல்) அவர்களையும் அவர்களது ஆளுமைப் பண்புகளையும் கொச்சைப் படுத்துவதோடு மிக மோசமாக  விமர்சனங்களையும் முன்வைக்கின்றது. இதன் விளைவாக அடிக்கடி நபி (ஸல்) பற்றிய கேலிச் சித்திர நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன.  

முஸ்லிம்களையும் அறபிகளையும் காட்டுமிராண்டிகளாகவும், இரத்தம் குடிக்கும் ராட்சகர்களாகவும், பயங்கர வாதிகளாகவும், உலக சமாதானத்தினதும் அமைதியினதும் எதிரிகளாகவும் காட்டுகிறது. மேற்கத்தேயவாதிகளை உலகின் கதாநாயகர்களாக சித்தரிக்கிறது.

இஸ்லாம் குறித்து மேற்கத்தேயம் ஏன் பயப்படுகிறது?

இயற்கையாகவே இறைவன் ஏற்படுத்தி வைத்திருக்கும் இஸ்லாத்தின் இயங்கியலானது இஸ்லாத்தின் தோற்றம் முதல் இன்று வரை அது சந்தித்து வந்த எதிர்ப்புக்களை தகர்த்தெறிந்துள்ளது. இந்த சக்தி இஸ்லாத்திற்கு மாத்திரம் உரியது என்பதனால் எதிர்காலம் இஸ்லாத்திற்கே என மேற்குலகு அஞ்சுகிறது. 

மேற்கத்தேயம் மனித வழிகாட்டல்களாக முன்வைத்த கோட்பாடுகள் கருத்துக்கள் சித்தாந்தங்கள் ஏறத்தாழ தோற்றுப் போய்விட்டன. இனிமேல் கொடுப்பதற்கு அவற்றிடம் எதவுமில்லை. ஒருவகை சித்தாந்த வங்கரோத்து நிலையில்தான் அவை உள்ளன. 

இந்நிலையில் அவ்விடத்தை இஸ்லாம் நிரப்பிவிடுமோ என்ற அச்சம் மேற்கத்தேயர்களை ஆட்கொண்டுள்ளது. எனவே மேற்கில் வேகமாக பரவும் மார்க்கமாக இஸ்லாம் மாறியிருப்பதால் அதனை இழிவுபடுத்தி பல ஆய்வுகளையும் புத்தகங்களையும் அவர்கள் லெளியிடுகின்றனர். உதாரணமாக: 

1.Islamic invasion, Confronting of the world’s growing religion by Robert Mores 
2.Militent Islam Reaches America by Deniel Pipes

போன்ற நூற்களை கூற முடியும். இந்தப்புத்தகங்களின் வருகை மேற்கத்தேயம் தோல்வியடைகிறது அவ்விடத்தை இஸ்லாம் நிரப்புகிறது என்பதற்கான ஆதாரங்களாகும். அதேபோல் மேற்கத்தேயவாதிகள் இஸ்லாம் குறித்த போதிய விளக்கமின்மையால் உருவாக்கிக் கொண்ட பீதியே அவர்கள் இஸ்லாத்தின் உண்மையை அறியவில்லை. அதனை வெறும் கோட்பாடாக பார்க்கின்றனர். சில நிகழ்வுகளையும் தோற்றப்பாடுகளையும் வைத்தே இஸ்லாத்தை மதிப்பிடுகின்றனர். தமது உலக சித்தாந்தங்களை இஸ்லாத்தோடு பொருத்திப் பார்க்கின்றனர். இவைகளே இஸ்லாம் குறித்த அச்சம் எழுவதற்கு காரணமாக அமைகின்றன.

Islamophobia வை உருவாக்குவதில் மேற்கத்தேய ஊடகங்கள்

இன்றைய உலகம் ஊடகப் பயங்கரவாதத்தின் (Media Terrorism) கோரப்பிடியில் சிக்கியிருக்கிறது. ஊடகத் தொழில் நுட்பத்தில் அபரிதமான வளர்ச்சி கண்டுள்ள மேற்குலகின் தயாரிப்புக்களுக்கும் விரிவுபடுத்தலுக்கும் முன்னால் ஏனைய ஊடகங்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. எங்கு பார்த்தாலும் மேற்கு ஊடகங்களின் ஆதிக்கமே தொழிற்படுகின்றது. இதனால் மேற்கத்தேயத்தின் சிந்தனைகளும் கருத்துக்களும் உலகமயப்படுத்தப்பட்டுள்ளன. 

2001/09/11 க்குப் பின்னர் மேற்குலகின் தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள் என பல்வேறு தளங்களிலும் இஸ்லாமியப் பீதியை மேற்குலகு உலகமயப்படுத்தியது. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் முன்னணி ஊடக நிறுவனங்களாக செயற்பட்டு வருபவை யூத செல்வந்தர்களுக்கு சொந்தமானவை. உதாரணமாக Fox News,CNN,Reuturs,Google போன்றவற்றை குறிப்பிடலாம் இவை இஸ்லாமியப் பீதியை மனித உள்ளங்களில் கனகச்சிதமாக விதைத்து வருகின்றன. 

இஸ்லாமியப் பீதியை ஏற்றுமதி செய்வதில் Hollywood திரைப்படங்களின் பங்கு

ஹொலிவூட் திரைப்படங்கள் உலகளவில் பாரிய கவனயீர்ப்பைப் பெற்ற பல ரசிகர்களை வசீகரித்து வைத்திருக்கும் மேற்கத்தேய சினிமா முறையாகும். இது 1ம் உலக மகா யுத்தத்தின் பின்னர் அமெரிக்காவை நோக்கி குடிபெயர்ந்த யூதர்களினால் உருவாக்கப்பட்டது. ஹொலிவூட் சினிமாவின் திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் பெரும்பான்மையானவை யூதர்களுக்கு சொந்தமானவை. உதாரணமாக Colombia Coldwyn Myer-Metro Warner Brothers Peramount Universal போன்றவற்றைக் குறிப்பிட முடியும். ஹொலிவூட் சினிமாக்கள் முஸ்லிம்களை வில்லன்களாகவும் பண்பாடற்ற, நாகரிகம் தெரியாத, மனித இரத்தத்தை குடிக்கும் சமூகமாகவே அவர்களை சித்தரிக்கின்றன. 2001/09/01 இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பின் இந்த நிலமை அதிகரித்துள்ளது. இவ்வாறான ஹொலிவூட் திரைப்படங்களில் 70% க்கும் மேற்பட்டவை முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் பெண்களை துன்புறுத்துபவர்களாகவும் காட்சிப்படுத்துகின்றன.

இதுவரை வெளியான முஸ்லிம்களை மோசமாக சித்தரிக்கும் திரைப்படங்களுக்கு உதாரணங்களாக Erodus, Black Sunday, Delta Force, Iron Eagle, Ruls Of Engagment, Hidalco, The Mummy Returns போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

எதிர்காலம் இஸ்லாத்திற்கே!

இஸ்லாத்தை அழிப்பதற்கு அதன் எதிரிகள் என்னதான் முயற்சித்தாலும் அதன் வளர்ச்சியையும் எழுச்சியையும் எந்த சக்தியாலும் அழித்துவிட முடியாது. இது ஏக இறைவனின் வாக்காகவும் உள்ளது. மோசி ஸாபிச் என்ற ராஞ தந்திரி தனது ஆய்வில்  (வளரும் பிறையும் நாகரிகத்தின் வீழ்ச்சியும்) எனும் தலைப்பின் கீழ் தனது Europe and Islam எனும் நூலில் கூறும் பொழுது 21ம் நுற்றாண்டின் அரை இறுதிப் பகுதிக்குள் இஸ்லாம் ஐரோப்பாவின் தீர்மானிக்கும் சக்தியாக மாறும் சாத்தியம் உள்ளது என்கிறார்.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டிருக்கும் இஸ்லாமிய எழுச்சி அலைகளினால் மேற்குலகம் நடுநடுங்கிப் போயுள்ளது. இதனால்தான் இஸ்லாம் குறித்த மாயைகனை அவர்கள் கட்டமைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் மேற்குலக மக்கள் இஸ்லாத்தை தெரிந்து கொள்வதில் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுதான் இன்றைய ஐரோப்பாவினதும் அமெரிக்காவினதும் நிலை. மேற்கத்தேயவாதிகள் ஏற்படுத்திவிட்ட இஸ்லாம் பற்றிய பீதி அங்குள்ள மக்களை இஸ்லாம் பற்றி தேடவும் அறியவும் வழி சமைத்துள்ளது.

அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர் (அவர்களுக்கு எதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். இன்னும் சூழ்ச்சி செய்வோரில் அல்லாஹ் மிக்க மேலானவன். (08-30)

3 comments:

  1. Hi Friends,

    வயல் நிலங்களிலே வெகுவேகமாகப் பரவி வருகின்ற பார்த்தீனியம் எனும் தீங்கு பயக்கும் தாவரத்தை நீங்கள் அறிவீர்களா?

    அந்த நச்சுக் களையை எவ்வளவுதான் அழிக்க முயன்றாலும் அது விடாப்பிடியாகவும் வேகமாகவும் பரவிக்கொண்டேதான் உள்ளது.

    இந்தக்களை விவசாயிகளுக்கு தொழில்ரீதியாக மட்டுமல்ல அவர்களுக்கும் வளர்ப்புப் பிராணிகளுக்கும் உடல் ரீதியாகவும் ஒவ்வாமை போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்த வல்லது.

    இந்த நச்சுக்களையைப் பார்த்து மக்கள் பயப்படுவதற்குப் பெயர் 'பார்த்தீனியமோபோபியா' என்று அந்தத் தாவரத்திற்காக நாம் பெருமைப்பட்டுக்கொண்டால் அது எத்தனை அறிவீனமோ அதைவிடவும் அறிவீனம்தான் மேலுள்ள கட்டுரையாளரின் இஸ்லாம் பற்றிய 'போபியா' பெருமையும்.

    மேற்கத்தியர்கள் இஸ்லாத்தைப் பற்றிய பிழையான கருத்துக்களுக்குள்ளாவதற்கு தனியே இஸ்லாத்தின் மீதான காரணமற்ற வெறுப்பு மட்டுமல்லாமல் நம்மவர்களின் பிழையானதும் அலட்சியம் நிரம்பியதுமான வாழ்க்கை முறைகள் என்பதையும் நாம் கசப்பான உண்மையாக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

    அவர்கள் நம்மை வெறுப்பதற்காக நாம் கடினப்போக்காளர்களாகவும் ஆக்கிரமிப்பாளர்களாகவும் மாறிவிட நினைப்பது அடிமுட்டாள்தனமாகும்.

    இஸ்லாம் ஒரு மதமே தவிர அது ஒன்றும் ஆக்கிரமிப்புச்சின்னம் அல்ல. அவ்வாறு அது இருக்கவும் கூடாது. அது அப்படி வர்ணிக்கப்படுவது இஸ்லாத்திற்கு பெருமையும் அல்ல. இஸ்லாத்தை அன்பைப்போதிக்கும் சீரிய மதமாக மக்களிடையே முன்னிறுத்திப் பெருமைப்படுவதை விடுத்து இப்படியெல்லாம் சண்டித்தனமாக பெருமிதமடைவதெல்லாம் நமக்கு நன்மை பயக்கும் விடயங்களல்ல.

    புரிந்து கொள்ளுங்கள்!

    ReplyDelete
  2. மேலே குறிப்பிப்பட்டுள்ள பின்னூட்டம், கிரகிப்புக்குறைபாடு,அறியாமை ,மார்க்க அறிவுப்பஞ்சம்,ஆகியவற்றின் பிதிம்பம்.

    ReplyDelete
  3. Abdul Careem,


    நீங்கள் 'பிரதிபிம்பம்' என்ற தமிழ்ச் சொல்லை 'பிதிபிம்பம்' என்று "அழகாக" குறிப்பிட்டதிலிருந்தே தெரிகின்றது யாருக்கு கிரகிப்புக் குறைவு என்பது.

    சரி, மார்க்க அறிவில் பஞ்சம் என்றால் அதுகுறித்து உங்கள் சந்தேகங்களை பின்னூட்டத்திலே எழுப்புங்கள். நான் பதில் தருகின்றேன்.

    என்னுடைய கருத்தை கருத்தால் வெல்லும் நோக்கமில்லாமல் அவதூறு பேசுமளவுக்குத்தான் உங்களது "கிரகிப்பு சக்தி" உள்ளது போலும்.

    பாவம் கரீம் நீங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.