Header Ads



நைல் நதி விவகாரம் - எகிப்தும், சூடானும் முறுகல்


வடகிழக்கு ஆப்பிரிக்காவில் பாயும் நைல் நதி, உலகின் நீளமான நதி என்ற பெருமையைப் பெற்றது. சர்வதேச நதியாக அறிவிக்கப்பட்ட இந்நதியின் நீரோட்டத்தினால், 11 நாடுகள் பலன்பெறுகின்றன. இவற்றில் குறிபிடத்தக்கவை எகிப்தும், சூடானும் ஆகும். 

இந்த நைல் நதிக்கு, வெள்ளை நைல், நீல நைல் என்ற இரண்டு கிளை நதிகள் உண்டு. இவற்றில், நீல நைல், எதியோப்பியா நாட்டிலிருந்து வந்து, சூடானின் தலைநகர் அருகில் நைல் நதியுடன் கலக்கின்றது. எதியோப்பியா நாடு, தன்னுடைய நீர்த்தேவைகளுகாகாகவும், மின்சார உற்பத்திக்காகவும், நீல நைல் நதியின் குறுக்கே ரினைசான்ஸ் என்ற பெயரில் அணை ஒன்றைக் கட்டத் திட்டமிட்டுள்ளது. 

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, நீரின் போக்கைத் திருப்ப எதியோப்பிய அரசு முனைந்தபோது, சூடானும், எகிப்தும் தங்களுடைய ஆட்சேபனையைத் தெரிவித்தன. சீனா, இத்தாலி போன்ற நாடுகள் எதியோப்பியாவின் இந்த அணை கட்டும் முயற்சிக்கு உதவுவதால், எகிப்து தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் சூயஸ் கால்வாய் நீர்வழிப் போக்குவரத்தை மூட முடிவு செய்துள்ளது. 

எகிப்து நாட்டின் அதிபர், முகமது மோர்சி, சமீபத்தில், எதியோப்பியாவிற்கு சென்றிருந்தார். அவர் வந்து சென்ற சில தினங்களுக்குப் பின்னர் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது, எகிப்து மக்களை அவமானப்படுத்துவதுபோல் கருதப்படுகின்றது. எகிப்து நாட்டின் வளங்களுக்குத் தீமை விளைவிக்கக்கூடிய இந்தத் திட்டம் நிறுத்தப்பட வேண்டும். இதற்கு உதவி புரியும் சீனா, இத்தாலி போன்ற நாடுகளுடன் இது குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபடவேண்டும் என்று எகிப்தின் நேஷனல் சால்வேஷன் பிரண்ட்டின் சக தலைவரும், பாப்புலர் கரண்ட் கட்சித் தலைவருமான ஹம்தீன் சபாஹி தெரிவித்துள்ளார். 

எகிப்து, சூடான், எதியோப்பியா நாட்டு அதிகாரிகளின் கூட்டுக்குழுவின் விவாதங்களுக்குப்பின், இந்த அணையினால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்த அறிக்கை ஒன்று, விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3 comments:

  1. என்னவோ ஒவ்வொரு நாடுகளுக்குள்ளும் அயல் நாட்டவர்களுடனும் பகையை உண்டாக்கி குழப்பங்களை உண்டாக்கும் தீயவர்களின் விளைவே இதுபோன்ற மோதல்கள் சமூகங்களிடையே.

    ReplyDelete
  2. இது மோதல் அல்ல...... முரண்பாடு..... பேசித் தீர்துகொள்ளலாம்.

    ReplyDelete
  3. who can give the answer for this this , not only this even sri lanka problem also , yes islamic khilafah state cane give the answer, so is the high ranking vital issue of the muslim ummah, and obligation of the muslim ummah, so we have to work for it day and night to resume the islamic way of life through the islamic khilafah state, is only can give the answer for every political problem, do every single person no muslim ummah should for it ,according to properhoos method, not through the kufr method ,like a democrcy or what ever

    ReplyDelete

Powered by Blogger.