'நரேந்திர மோடி பிரதமர் ஆனால் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இருக்காது'
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை முஸ்லிம்களே ஏற்றுக் கொண்டாலும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
கம்பம் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய திருமாவளவன் இதுகுறித்து கூறுகையில், "விடுதலை சிறுத்தைகள் கட்சியை யாரும் அசைக்கமுடியாது. தேர்தலுக்கு தேர்தல் அணி மாறுவது நான் இல்லை. எந்த அணியில் சேர்ந்து எம்.பி.யாக ஆனேனோ அந்த நன்றியை மறக்க மாட்டேன். தி.மு.க.வே எங்ளோடு கூட்டு வேண்டாம் என்று கூறினால் கூட அதைப்பற்றி நாங்கள் கவலை படமாட்டோம்.
ஈழத்தமிழர்களுக்காகவும், முல்லை பெரியாறு பிரச்சினைக்காகவும், சிறுபான்மை சமுதாய மக்களுக்காகவும் எங்கள் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. நரேந்திர மோடி பிரதமர் ஆனால் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இருக்காது. நரேந்திரமோடியை முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டால் கூட நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்." இவ்வாறு திருமாவளவன் பேசினார்.
இந்திய அரசியலைப்பற்றி அறியாதவர்களிடம் போய்ச்சொல்லுங்கள் இதுபோன்ற செய்திகளை.
ReplyDelete