கல்முனையில் பொலிஸ் + பள்ளிவாசல் பிரதிநிதிகள் சினேகபூர்வ கலந்துரையாடல்
(எம்.எம். ஜெஸ்மின், ஏ.பீ.எம். அஸ்ஹர்)
கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்யு.ஏ. கஃபார் அவர்களுக்கும், ஜாமியுத் தௌஹீத் ஜும்மா பள்ளிவாயல் மற்றும் மஸ்ஜிதுல் ஹுதா நிருவாகிகளுக்கும் இடையிலான சினேகபூர்வ கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றது.
இதில் கல்முனைப்பிரதேசத்தில் இடம்பெற்று வரும் கலாசார மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகளை ஒழிப்பதில் இஸ்லாமிய இயக்கங்கள் பங்களிப்பு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வில் ஜாமியுத் தௌஹீத் ஜும்மா பள்ளிவாயல் தலைவர் அல் ஹாஜ் ஏ.ஜெயினுலாப்தீன் மற்றும் கலாநிதி. எம்.ஐ.எம். ஜெஸீல் உட்பட நிருவாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
Post a Comment