"ஜெயிலில் இருந்த நாட்களை மறக்கமாட்டேன், நான் ஒரு அப்பாவி - ஸ்ரீசாந்த்
""ஜெயிலில் இருந்த நாட்களை மறக்கமாட்டேன், நான் ஒரு அப்பாவி,'' என, ஸ்ரீசாந்த் தெரிவித்தார்.
ஆறாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரில் சூதாட்ட புகாரில் சிக்கிய ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் உள்ளிட்டோர், ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது, "மொகோகா' எனும், பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டது. இதுகுறித்து விசாரித்த "மொகோகா' கோர்ட், ஸ்ரீசாந்த், அங்கித் சவான் உட்பட 19 பேருக்கு ஜாமின் வழங்கியது.
திகார் சிறையில் இருந்து வெளியே வந்த ஸ்ரீசாந்த் கூறுகையில், " ஜெயிலில் இருந்த நாட்களை, வாழ்க்கையில் எப்போதும் மறக்கமாட்டேன். கடந்த 27 நாட்கள், எனக்கு அதிகமான பாடம் கற்றுக்கொடுத்தது. இந்திய நீதித்துறையின் மீது முழு நம்பிக்கை உள்ளது. நான் ஒன்றும் அறியாத அப்பாவி என, விரைவில் நிரூபணம் ஆகும்,'' என்றார்.
திரூடன் எப்போது ஆவது தனது தப்பை ஒற்றுக் கொண்டது உண்டா?
ReplyDeleteSrisanth,
ReplyDeleteஅப்படியானால் யாரெல்லாம் பாவிகள்?