இவ்வருடம் ஹஜ் செல்ல பதிவுசெய்தவர்களுக்கான நேர்முகப் பரீட்சை ஆரம்பம் (படங்கள்)
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
இவ்வருடம் புனித ஹஜ் பயணத்தை மேற் கொள்வதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்தவர்களில் 2800 பேருக்கான நேர்முகப் பரீட்சையும் கருத்தரங்கும் அவரவர்கள் விண்ணப்பித்த மாவட்டங்களில் தற்போது திணைக்களத்தால் மேற் கொள்ளப்பட்டு வருகின்றது.
அக்குறனை அஸ்ஹர் கல்லூரியிலும் கண்டி பதியுதீன் மஃமூத் மகளீர் கல்லூரியிலும் இடம்பெற்ற நேர்முகப் பரீட்சைகளிலும் கருத்தரங்களிலும் ஹாஜிகள் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட படங்கள்.
திணைக்களப் பணிப்பாளர் எம்.எச்.எம்.ஸமீல் கருத்தரங்கில் ஹாஜிகளுக்கு விளக்கமளிப்பதையும் படங்களில் காணலாம்.
இதெல்லாம் சரிதான் இந்த முஸ்லிம் தினைக்களச்செயற்பாடுகள் சரிதானா என்று ஒருமுறை அலசிப்பார்க்க வேண்டும். சென்ற ஆண்டு நானும் மக்காவுக்கு சென்றேன் எங்களுக்கு முஸ்லிம்திணைக்களத்தால் உத்தியோக பூர்வமாக வெளியிடப்பட்ட ஒரு கைஏடு தரப்பட்டது அது தமிழில் அச்சிடப்பட்டு இருந்தது அதனை வாசித்தால் ஓன்றுமே புரியாது ஐம்பதுக்கு மேற்பட்ட அச்சுப்பிழைகள். பக்கங்கள் மாறியும் தலை கீழாகவும் கட்டபட்டிருந்தன. ஆனால் அமைச்சரின் வாழ்த்து செய்தி மட்டும் சரியாக இருந்தது .ஒரு சிறிய கை நூலைக்கூட சரியாக செய்ய முடியாத திணைக்களத்தை எப்படி விமர்சிப்பது. போனது போகட்டும் இந்த முறையாவது சரியாக அதனை அச்சிட்டு வழங்குவார்களா ?
ReplyDeleteminister ffowzy, minister hakeem , minister kadar , ivarhaleelam interview panni reject pannunga,,,
ReplyDelete