Header Ads



பெரும்பான்மை மக்களின் மனங்களை எமது நற்பண்புகளால் வெல்வோம்!

(எம்.ஜே.எம். தாஜுதீன்)

இலங்கையில் உள்ள பெரும்பான்மை மக்களில் சிலர் முஸ்லிம் சமுகத்துக்கு எதிராக இனரீதியான செயற்பாடுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்ற போதிலும் முஸ்லிம்கள் தமது சிறந்த பண்புகளால் அவர்களின் மனங்களை வெல்ல முயற்சிக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் ஏ.எஸ்.முஹம்மத் தெரிவித்தார்.

20 ஆம் நூற்றாண்டில் ஊடகம் எனும் தொனிப் பொருளிலான செயலமர்வொன்று நீர்கொழும்பு அல் – ஹிலால் மத்திய கல்லூரியில் நேற்று (22)  சனிக்கிழமை  முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில்நடைபெறறது.இந்த வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பரீட்சைகள் ஆணையாளர் ஏ.எஸ். முஹம்மத் இவ்வாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்-

விரல் நுனியில் செயற்படும் அளவுக்கு இன்றைய ஊடகத்துறை வியத்தகு முன்னேற்றம் கண்டுள்ளது. எனினும் இறைத் தூதை முழு உலகுக்கும் எத்திவைத்த எமது ரஸூல் (ஸல்) அவர்கள் ஒரு சிறந்த ஊடகவியலாளர் என்பதை எவரும் மறுத்திட முடியாது. சகல துறைகளிலும் இலங்கை முஸ்லிம்கள் இன்ற எழுச்சி பெற்றுவருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத காரணத்தினால்தான் முஸ்லிம் சமுகத்தின் மீது பெரும்பான்மைச் சமூகத்தினர் இனரீதியான செயற்பாடுகளைக் கட்டவிழ்த்து விடுகின்றனர்.

இவற்றையெல்லாம் முறியடிக்கும் சக்தி முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு உண்டு என்பது எனது உறுதியான நம்பிக்கை. ஊடகத்துறை மிகவும் பலம் வாய்ந்தது. ஆட்சியாளர்களை ஆட்டிப்படைக்கும் திறன் கொண்டது.எனவே இன்றை இளைஞர்கள் ஊடகத்துறையில் சிறப்புப் பயிற்சி பெற்று சமூகத்தைக் காக்கும் உயரிய பணியில் பங்குகொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். 

நீர்கொழும்புப் பிரதேசத்தில் கல்விப் பணிப்பாளராக- காதி நீதிபதியாக- சமூக சேவையாளராக நீண்ட காலம் கடமையாற்றிய எம். ஆர். எம். மிஹினார் மற்றும்; கல்வித்துறையிலும் ஊடகத்துறையிலும் சிறந்த பணியாற்றிய கிச்சிலான் அமதுர்ரஹீம் ஆகியேர் இந்த ஊடகச் செயலமர்வில் பொன்னாடை போh;த்தி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

மீடியா போரத்தின் செயலாளர் எம்.ஏ.எம். நிலாம்- சிரேஷ்ட ஊடகவியலாளர் ரஷீத் எம். ஹபீல் ஆகியோரும் உரையாற்றினர். கலைவாதி கலீல்- எச்.எம். பாயிஸ்- ஜாவிட் முனவ்வர்- அஸ்கர் கான் ஆகியயோர் இங்கு விரிவுரைகளை நடத்தனர். 



No comments

Powered by Blogger.