Header Ads



கல்முனையில் முன் அறிவித்தலின்றி அடிக்கடி துண்டிக்கப்படும் மின்சாரம்

(ஏ.எல்.ஜுனைதீன் )    

கல்முனைப் பிராந்தியத்தில் எதுவித முன் அறிவித்தலுமின்றி அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவது குறித்து இப் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மின்சாரம் இவ்வாறு துண்டிக்கப்படுவதால் பல அசெளகரியங்களை எதிர்கொள்ள வேண்டியிருப்பதாகவும் கூறுகின்றனர்

    வீடுகளில் பாவிக்கப்படும் குளிர்சாதனப் பெட்டி மின் விசிறி மின் குமிழ்கள் கணனி  தொலைக் காட்சிப் பெட்டி என்பன போன்ற மின் உபகரணங்கள் இவ்வாறு அடிக்கடி மின்சாரம் தடைப்படுவதால் பழுதடைவதாகவும் தெரிவிக்கின்றனர்.

    இது குறித்து இலங்கை மின்சார சபையின் கல்முனைப் பிரதேச பிரதம மின் பொறியலாளர் எம் ஆர். எம். பர்ஹானிடம் வினவியபோது  அம்பாறையில் மின்சார ஊடு கடத்தும் உப நிலையத்தில் திருத்த வேலைகள் மற்றும் பராமரிப்பு வேலைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. உண்மையாகவே அம்பாறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இத் திருத்த வேலைகள் காரணமாக கல்முனைப் பிரதேசத்தில் காலையிலிருந்து மாலை வரையும் முற்றாக மின்சாரம் தொடர்ந்து  துண்டிக்கப்படல் வேண்டும்.ஆனால் நாங்கள் அவ்வாறு முற்றாகத் துண்டிக்காமல் மின் பாவனையாளர்களின் நலன் கருதி பகுதி பகுதியாக மின்சாரத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றோம்.மட்டக்களப்பிலிருந்தும் மின்சாரத்தை கல்முனை பிரதேசத்திற்கு சில நேரங்களில் வழங்கிக் கொண்டிருக்கின்றோம் மக்கள் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.சபையின்  பராமரிப்பு வேலைகளுக்கும் பொறுமையுடன் ஒத்துழைப்பும் தரல் வேண்டும். என்றார்.

1 comment:

  1. மின்சார சபையின் இயலாமையை மூடி மறைக்கும் பொறியியலாளரின் நொண்டி காரணம்....இம்மாதம் 8ம் திகதி காலை 8முதல் இரவு 7வரை மின்தடை இருந்த்தது, இம்மாதம் நிறைவுக்கு பல தடவைகள் மின்தடை ஏற்படாதிருக்குமானால் அது ஆச்சரியமாகவே இருக்கும்.....

    ReplyDelete

Powered by Blogger.