Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் என்ன செய்யப்போகிறது..?

13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டுமென சபரகமுவ மற்றும் தென் மாகாணசபைகளில் 13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சபரகமுவ மாகாணசபையில் இந்தத் தீர்மானம் 17 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவசர விடயமாக மாகாண முதலமைச்சர் மஹீபால ஹேரத் இந்தத் தீர்மானத்தை சமர்ப்பித்திருந்தார். இந்தத் தீர்மானத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
  
இதேவேளை, தென் மாகாணசபையிலும் 13ம் திருத்தச் சட்டத்தை திருத்தி அமைக்க வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒரு மேலதிக வாக்கினால் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆறு ஆளும் கட்சி உறுப்பினர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து வாக்களித்தனர்.

மத்திய மாகாணசபையில் இந்த விடயம் 28ம் திகதி விவாதிக்கப்பட உள்ளதாகவும், வடமேல் மாகாணத்தில் நாளைய தினம் இந்த விடயம் விவாதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கிழக்கு மாகாண சபையில் இவ்வாறான ஒரு திர்மானம் கொண்டுவரப்படின் முஸ்லிம் காங்கிரஸினதும், ஏனைய முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாடு என்னவென்று கேள்வி எழுப்பபட்டுள்ளது.  குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் எத்தகைய நிலைப்பாட்டை மேற்கொள்ளும், என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

3 comments:

  1. உஷ்... உஷ்.. தலைவர் ஆழ்ந்த நித்திரையில் இருக்கிறார். அவரை டிஸ்டாப் பண்ண வேண்டாம்!

    சக முஸ்லிம் கட்சித் தலைவர்கள் அவர் கண் விழிக்கும் வரை காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை அவசரப்படுத்தாதீர்கள்..!

    எல்லாம் நடந்து முடிந்த பின்னர் அறிக்கைகள் வரும். அவற்றை வாசிக்கக் காத்திருங்கள்!!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-



    ReplyDelete
  2. நிச்சியம் 13வது சட்டம் திருத்தி காலத்துக்கும் நேரத்துக்கும் ஏற்றவாரு அமைக்க வேண்டும்,இந்த சட்டம் பழசாகி விட்டது அந்த சட்டத்திலுள்ள நிறை குறைகள் நிவர்த்தி செய்து தற்காலத்துக்கு ஏற்றவாறு திருத்தி அமைப்பதில் ஈடுபட வேண்டும்.

    மனிதரால் ஏற்றபட்ட சட்டம்கள் எந்த காலத்துக்கும் பொருந்தாது இவை ஒவ்வொரு முஸ்லிமும் மனதில் வைத்திருக்க வேண்டும்.குர்ஹனூம் ஹதிஷும் எங்கும் எப்போதும் எந்த காலத்துக்கும் பொருந்தும்.

    ReplyDelete
  3. அன்று :18 இற்கும் நான் தான் காரணம்
    நாளை :13 திருத்ததிட்கும் . நான் தான் காரணம்

    என்று சொன்னாலும் சொல்லுவார் . முஸ்லிம் சமூகம் காதுல பஞ்சோட ரெடியா இருங்க. .

    ReplyDelete

Powered by Blogger.