ஈரானிலிருந்து எப்பொருளையும் இறக்குமதி செய்யப் போவதில்லை - குவைத்
சிரியா போரில் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லாவின் பங்களிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஈரானிலிருந்து எப்பொருளையும் இறக்குமதி செய்யப் போவதில்லை என்று குவைத்தின் முன்னணி கூட்டுறவு அங்காடிகள் அறிவித்துள்ளன.
குவைத்தில் ரிக்கா, பயான், கைதான் உள்ளிட்ட ஏழு பகுதிகளில் இயங்கும் கூட்டுறவு அங்காடிகள் இது வரை சிரியா போரில் சிரியா அரசுக்கு மறைமுக ஆதரவு அளித்த வந்த ஈரான் அரசும் ஹிஸ்புல்லாவும் வெளிப்படையாக அங்குள்ள போராளிகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இனி ஈரான் பொருட்களை இறக்குமதி செய்யப் போவதில்லை என்று அறிவித்துள்ளன.
மேலும் ஈரான் பொருட்களை வாங்க செலவழிக்கப்படும் ஒவ்வொரு தினாரும் சிரியாவின் குடிமகன்களின் மீது செலுத்தப்படும் தோட்டாக்கள் என்றும் ஈரான் தன் ஆதரவை திரும்ப பெறும் வகையில் அமைதியான தங்கள் எதிர்ப்பு போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கூட்டுறவு நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. inneram
அமெரிக்கா பொருக்கலை போல ஈரான் பொருக்களை முஸ்லிம்கள் வாங்க கூடாது ஏனென்றால் ஹிஸ்புள்ளஹும் ஈரானும் சுன்னி ஹாலை தாறுமாறாக சுட்டு தள்ளுரங்க ஆசாத் சியா என்ன்ட கரணதுக்கஹா
ReplyDelete'நேட்டோ முப்தி' கண்றாவியின் காட்டுத்தர்பார் நன்கு வேலை செய்கின்றது. றுசூலுல்லாஹ் இன்று உயிருடன் இருந்திருந்தால் அவரும் அமெரிக்கா தலைமையிலான நேட்டோவுக்குத் தான் ஆதரவளித்திருப்பார் என்கிறாரே.
ReplyDeleteஅவரின் வலையில் சிக்கியுள்ள அப்பாவிகளான நாம் என்னதான் செய்ய முடியும்?
சகோதர முஸ்லிம் நாடுகளின் உற்பத்திகளுக்குப் பதிலாக இஸ்ரேல் மற்றும் நேட்டோ சகோதரர்களின் உற்பத்திகளை மாற்றீடு செய்வோம்.
அப்போதுதான் எமது அல்லாஹ் தனது குர்ஆனில் கூறியுள்ள யூதர்களையும் நஸாராக்களையும் உங்கள் பாதுகாவலர்களாக – நண்பர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டாம்' என்ற வாக்கைக் கடைப்பிடிப்பவர்களாவோம்.
சிரியாவில் பசார் அல் அஸாத்தின் ஆட்சி அடக்குமுறை ஆட்சி, தனிதனித ஆட்சி என்றால் சவூதியில் கத்தாரில் பஹ்ரைனில் என்ன ஜனநாயக ஆட்சியா நடக்கின்றது?
நல்லது நடக்க பிரார்த்திப்போம்