அம்பாறை பிரதான போக்குவரத்துப் பாதைகளில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை
(ஏ.எல்.ஜுனைதீன் )
அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதான போக்குவரத்துப் பாதைகளிலும் இங்குள்ள சந்தைப் பிரதேசங்களிலும் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம்
அதிகரித்துள்ளதால் வீதி விபத்துக்கள் அதிகரிப்பதுடன் போக்குவரத்து நெரிசல்களும் ஏற்படுகின்றன என இப் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இம்மாவட்டத்தின் காரைதீவு-அம்பாரை கல்முனை-பொத்துவில் கல்முனை- கிட்டங்கி பிரதானப் போக்கு வரத்துப் பாதைகளில் இக்கட்டாக்காலி மாடுகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுவதாகவும் வாகனச் சாரதிகளால் புகார் தெரிவிக்கப்படுகின்றது.
காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாவடிப்பள்ளி, மற்றும் சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட பொலிஸ் நிலைய பிரதான பாதை என்பனவற்றில்
இக்கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதுடன் போக்கு வரத்திற்குத் தடையை எத்படுத்துவதாகவும் வாகன சாரதிகளால் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
இக்கட்டாக்காலி மாடுகள் இங்குள்ள சந்தைப் பிரதேசங்களை அசுத்தமாக்குவதுடன் விற்பனைக்காக வைக்கப்படும் மரக்கறிகளையும் தின்றுவருகின்றன எனவும் வியாபாரிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இது மாத்திரமல்லாமல் இக்கட்டாக்காலி மாடுகள் இரவு நேரங்களில் பிரதான பாதைகளில் படுத்துறங்கி கழிவுகளைப் போடுவதுடன் பாதைகளையும் அசுத்தமாக்கிவிடுகின்றன எனவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
If the cattle slaughtering is stopped, imagine the situation. This will be the case on all Sri Lankan roads!
ReplyDeleteIthu aarambam, pohap pohath theriyum, naadu muluwathum walarum indha attakaasam maadrauppathai niruththinaal
ReplyDeleteIthutan aarambam beef ellam nirutiyathan pinnar itaiumvida atigamaha maaduhalin thollai eatpadapogum
ReplyDelete