இப்படியும் நடக்கிறது...!
(அபூ முஸ்னா)
அதிர்ஷ்ட இலாபச் சீட்டிலிழுப்பில் ஒரு கோடி பரிசு பெற்ற ஒருவர் தான் குறித்த லொத்தர் சீட்டை வாங்கிய லொத்தர் சீட்டு விற்பனை உதவியாளருக்கு அபூர்வமான முறையில் பரிசளித்த சம்பவம் ஒன்று அநுராதபுர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கெக்கிராவ பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அநுராதபுரம் நகருக்கு வந்த சமயம் அங்கு லொத்தர் சீட்டு விற்றுக் கொண்டிருந்த ஒருவரிடம் சில லொத்தர் சீட்டுக்களை வாங்கியுள்ளார். அவரது அதிர்ஷ்டம் அவர் வாங்கிய ஒரு லொத்தர் சீட்டுக்கு சீட்டிழுப்பின் போது ஒரு கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. இந்த சந்தோஷத்தில் அநுராதபுரம் நகருக்குச் சென்றுள்ள குறித்த நபர் அந்த லொத்தர் சீட்டை விற்பனை செய்த நபரைச் சந்தித்து தான் வாங்கிய சீட்டுக்கு ஒரு கோடி பரிசு கிடைத்துள்ள விடயத்தைத் தெரிவித்துள்ளதோடு, தனக்குரிய பரிசு கிடைத்ததன் பின்னர் அந்த சீட்டை விற்பனை செய்ததற்காக அவருக்கு சந்தோஷம் வழங்க எண்ணியுள்ளதாகத் தெரிவித்து அவரது தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக் கொண்டு சென்றுள்ளார்.
பின்னர் குறித்த பரிசுத் தொகையினைப் பெற்றுக் கொண்ட குறித்த நபர் ஓரிரு தினங்களின் பின்னர் அந்த லொத்தர் சீட்டு விற்பளை உதவியாளருக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு அடுத்த நான் ஒருவரை அழைத்துக் கொண்டு கெக்கிராவ நகருக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அந்த லொத்தர் சீட்டு விற்பளை உதவியாளரும் பெரும் கனவுடன் தனது சகோதரர் ஒருவரையும் அழைத்துக் கொண்டு அன்றைய லொத்தர் சீட்டு விற்பனையையும் விட்டுவிட்டு கெக்கிராவ நகர் சென்றுள்ளார்.
இவர்களை சந்தித்துள்ள குறித்த பரிசு பெற்றவர் அவ்விருவரையும் ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று குளிர்பானப் போத்தல்கள் இரண்டை வாங்கிக் கொடுத்துள்ளதோடு ஐந்து சிகரட்டுக்களையும் வாங்கிக் கொடுத்து குறித்த லொத்தர் சீட்டை தனக்கு விற்பளை செய்ததை தான் மறக்க மாட்டேன் எனவும், அதற்காக அவருக்கு மிகவும் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளதாகவும் கூறி அவ்விருவரையும் வழியனுப்பி வைத்துள்ளார். அநுராதபுரமிருந்து 40 ரூபாய் செலவு செய்து அன்றைய தின தொழிலையும் விட்டுவிட்டு கெக்கிராவ சென்று பெற்ற இந்த அனுபவம் அந்த விற்பளை உதவியாளரால் மறக்க முடியாத நிகழ்வாக உள்ளதாக அவர் தெரிவித்து வருகின்றார்.
(லக்பிம இணையத்தில் இன்று வெளியான செய்தியின் தமிழாக்கம்)
நல்ல விளம்பரம்.
ReplyDeleteமுஸ்லிம்களின் மேம்பாட்டுக்காய் உழைக்கும் இவ்விணையதளம் பொறுப்பற்றமுறையில் ஹறாமான விடையங்களை செய்தி என்ற பெயரில் விளம்பரம் செய்வது நல்லதல்ல