கிழக்கில் காத்தான்குடியில் விரைவில் மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழகம் - ஹிஸ்புல்லாஹ் உறுதி
(பழுளுல்லாஹ் பர்ஹான்)
அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் பூரண ஆதரவுடன் இலங்கையில் புதிய மலிக் அப்துல்லாஹ் பல்கலைக்கழகம் ஒன்று கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடியில் திறந்து வைக்க சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
இலங்கையில் வாழும் வறிய மாணவர் நலன் கருதி அவர்களுக்குப் பூரண வசதிகளையும் வழங்கி இலங்கையில் கல்விமயப்பயப்படுத்தும் தூர நோக்குடன் இப்பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு வருகின்றது.
இதன் முதற்கட்டமாக ஐம்பது மில்லியன் செலவில் கர்த்தான்குடியில் தற்காலிக கட்டிடம் அமைத்து முடிக்கப்பட்டுள்ளதுடன் மிக விரைவில் திறந்து வைக்கப்படவும் உள்ளது.
மேலும் இதற்கான புதிய கட்டிடம் கிழக்குமாகணத்தின் மத்திய பகுதியில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்கட்டதோடு இதற்கான ஒப்பந்தம் அடுத்த வாரம் கைச்சாத்திடப்பட உள்ளது. தேசிய ரீதியில் இயங்க இருக்கும் இப்பல்கலைக்கழகம் விரைவில் சர்வதேச பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட இருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக சவுதி உயர் அதிகாரிகள் குழு சகிதம் பிரதியமைச்சர் குழு நேரில் சென்று பார்வையிட்டது. இதில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சவுதி அரசியின் சட்ட ஆலோசகர் அஸீஸ் பின் யஹ்யா டாக்டர் அய்மன் கிழக்கு மாகண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் நகர தவிசாளர் அஸ்பர் ஆகியோரும் கலந்தகொண்டனர்.
இந்தப் அறபுப் பல்கலைக் கழகக் கனவு தொடங்கியதில் இருந்து கட்டிடம் தேடுவதிலேயே பல வருடங்கள் கழிந்து விட்டது.
ReplyDeleteமுதலில் புதிய காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தை அபேஸ் பண்ணப் பார்த்தார்கள். அதற்கு அப்பாடசாலையின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். பின்னர் மத்திய கல்லூரியின் விடுதிப் பகுதியில் கண் வைத்தார்கள். அதற்கும் பெற்றோரும், பாடசாலை நிர்வாகிகளும் முகஞ் சுழித்தனர்.
இப்போது 50 மில்லியன் செலவில் தற்காலிகக் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளதாகச் செய்தி வந்துள்ளது. பொது மக்களின் நிதிப் பங்களிப்புடன் கடற்கரையருகில் அல்மனார் அறிவியற் கல்லூரியைத்தான் அறபுப் பல்கலைக்கழகமாக உரு மாற்றப் போகிறார்களோ தெரியவில்லை.
அப்போ 50 மில்லியன் யாருக்குச் சேரும்...? ஒரே குழப்பமாக இருக்கிறதே..??
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
We have much muslims education places are in Sri lanka example Jamaiah naleemia in beruwela so that education places should more developt then we get more benifits.New university estabilishtments not so eassy more expensive work and we don´t have much islamic students so far.
ReplyDelete