ஆயுர்வேத மருந்துக்கூட்டுத்தாபனம் முதன்முறையாக யுனானி மருந்துகளை இறக்குமதி செய்தது
ஆயுர்வேத மருந்துக்கூட்டுத்தாபனம் முதன் முறையாக அறுபது லட்சம் ரூபாய்ச் செலவில் யுனானி மருந்து வகைகள் இறக்குமதி செய்துள்ளது.
சுதேச வைத்திய அமைச்சர் சாலிந்த திசாநாயக்கவின் பணிப்பின் பேரில் ஆயுர்வேத மருந்துக்கூட்டுத்தாபன அரச, தனியார் துறையினர் விநியோகத்துக்காக பல வகையான யூனானி மருந்து வகைகளை இறக்குமதி செய்துள்ளது.
சுதேச வைத்தியக் கல்லூரியின் யுனானி பிரிவில் கல்வி கற்கும் பட்டதாரி மாணவர்கள், பட்டப்பின் படிப்பினை மேற்கொள்ளும் மாணவர்கள் நீண்ட காலமாக மருந்து வகைகள் இல்லாமையால் எதிர்நோக்கி வந்த பிரச்சினை இதன் மூலம் தீர்ந்துள்ளதாக சுதேச வைத்தியக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் டாக்டர் எம்.எச்.எம். காஸிம் தெரிவித்தார்.
இந்த மருந்துகளை உத்தியோகபூர்வமாக ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்திற்கு கையளிக்கும் வைபவம் எதிர்வரும் 18ம் திகதி சுதேச வைத்திய அமைச்சில் நடைபெறவுள்ளது. இவ்வைபவத்தில் சுதேச வைத்திய அமைச்சர் சாலிந்த திசாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார். மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் கீழ் சுதேச வைத்தியத்தை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் ஆயுர்வேத மருத்துவ கூட்டுத்தாபனத்தின் தலைவர் சோமவீர சந்திரசிறி இந்த மருந்துத் தொகையை இறக்குமதி செய்துள்ளார்.
இதே தினம் அரச மற்றும் தனியார் துறைகளில் பணி புரியும் யுனானி டாக்டர்களுக்கான ஒரு கருத்தரங்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கருத்தரங்கில் பங்குபற்ற விரும்புவோர் mhmnazeem@hayoo.com, cassimmiyas@yahoo.com மூலம் அல்லது 0714447603 அல்லது 071 4886931 க்கு எஸ்.எம்.எஸ். செய்து பதிவு செய்து கொள்ளலாம் என இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்களுள் ஒருவரான டாக்டர் ரியாஸ் காஸிம் தெரிவித்தார்.
Post a Comment