Header Ads



குழாய் நீர் வினியோகத் திட்டத்திற்கான ஆரம்ப அங்குரார்ப்பண நிகழ்வு


(ரீ.கே.றஹ்மத்துல்லா)

பொத்துவில் சர்வோதயபுரம் ஆத்திமுனை மீள் குடியேற்றக் கிராம மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வந்த குடி நீர்ப்பிரச்சினைக்கு தீர்வளிக்கும் வகையில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையினால் 31-05-2013 குழாய் நீர் வினியோகத் திட்டத்திற்கான ஆரம்ப அங்குரார்ப்பண நிகழ்வு இடம்பெற்றது.

உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்எ.ம். அதாஉல்லாவின் பொத்துவில் பிரதேச இணைப்புச் செயலாளர் ஏ.எல். பதுர்காண் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை மற்றும் உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஏ.பி. தாவூத், கிழக்கு மாகாண அரைமச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையின் இணைப்புச் செயலாளர் யூ.எல். உவைஸ், பிரதேச செயலாளர் எம்.ஐ.எம். தௌபீக், பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.எம் வாஸீத்,  பிரதேச சபை எதிர்க்கட்சித்தலைவரும், பொத்துவில் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளருமான அப்துல் மஜீட், ஜெய்கா திட்ட பணிப்பாளர் எம். றத்னபால, நீர்வழங்கள் அதிகாரசபையின் பிராந்திய முகமையாளர் ஐ.எல் ஹைதர்அலி மற்றும் ஜெய்கா திட்டத்தின் திட்ட முகாமையாளர் நஸீர் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் இந் நிகழ்வில் கலற்து கொண்டனர்.

இந் நிகழ்வின் நிகழ்வில் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பிரதேச மக்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.


No comments

Powered by Blogger.