Header Ads



பதுளை பாத்திமா முஸ்லிம் மகளிர்கல்லூரி கட்டட நிர்மாண பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு


(அபூ ஷிபா)

  பதுளை முஸ்லிம் மகளிர் கல்லூரியின் மூன்று மாடி கட்டிடத்தின் இரண்டாம் கட்ட நிர்மாண பணிகளுக்காக, ஊவா மாகாண முதலமைச்சரின் பணிப்பில்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது , கடந்த சில தினங்களுக்கு முன் பதுளை UCMC  தலைவர் உட்பட செயற்குழு உறுப்பினர்கள், ஊவா மாகாண முதலமைச்சைர் ஷசிந்திர ராஜபக்ஷ அவர்களுடன் பசறையில் நடைபெற்ற சந்திப்பொன்றின் போது, பதுளை ப / பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் முதலாவது கட்டிடமான குறித்த மூன்று மாடி கட்டடத்தின் முதலாவது கட்டத்திட்கான நிதியினை ஒதுக்கீடு செய்த மாகாண முதல்வருக்கு நன்றி தெரிவித்ததுடன் அதன் இரண்டாவது கட்டத்தின் தேவையும் உணர்த்தப்பட்டது. கடந்த நான்கு வாருட காலத்தில் இக்கல்லூரியானது  கல்வி தரத்திலும் ஏனைய இணைபாட விதான செயற்பாடுகளிலும் 

பெற்றிருந்த சாதனைகளையும் முன்வைக்கப்பட்டது. ஊவா மாகாண கல்விச் செயலாளரின் விசேட பரிந்துரையும் இச்சந்திப்பின் போது முன்வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும் . 

குறிப்பிட்ட கட்டிட நிர்மாண பணிகளுக்கான நிதி ஏற்கனவே ஒதுக்கப் பட்டிருந்தாலும் அது மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் வேண்டுதலில் வேறொரு சிங்கள மொழி பாடசாலை ஒன்றிற்கு ஒதுக்க பட்டிருந்தது, இந் நிலைபாடுகளை அறிந்து கொண்ட பதுளை UCMC  யினர் மாகாண முதலமைச்சரை நேரில் சந்தித்து இதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர். அதனடிப்படையில் கடந்த ௦௭ ந் திகதி சிலுமின சிங்கள பத்திரிகையில் குறிப்பிட்ட நிர்மாண பணிகளுக்காக விலை மனு கோரப்பட்டு ௧௨ ந் திகதியான இன்று ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டு இன் ஷா அல்லாஹ் எதிர்வரும் சனிகிழமை குறித்த நிர்மாண பணிகள் ஆரம்பிக்கப் படவுள்ளன.   


No comments

Powered by Blogger.