Header Ads



ஜமாஅத்தே இஸ்லாமியின் இஜ்திமா


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் காத்தான்குடி உப பிராந்தியத்தின் ஏற்பாட்டில் 'நன்மை செய்யும் சமூகமே வெற்றி பெறும் சமூகம்' எனும் தொனிப்பொருளில்  ஆண்கள்,பெண்களுக்கான இஜ்திமா நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை ஆரையம்பதி பாலமுனை பிரதேசத்தில் இடம்பெறற்;றது.

பெண்களுக்கான நிகழ்வு பாலமுனை அலிகார் வித்தியாலய மண்டபத்தில் இன்று வெள்ளிக்கிழமை பி.ப.4.00 மணி தொடக்கம்.5.30 மணிவரை இடம்பெற்றதுடன் பெருமளவிலான பெண்களும் கலந்து கொண்டனர்.

இதேவேளை ஆண்களுக்கான நிகழ்வு முஹியித்தீன் ஜூம்மா பள்ளிவாயலில் அஷர் தொழுகை தொடக்கம் இரவு 9.மணி வரை நடைபெற்றது.

இம்மாபெரும் இஜ்திமா நிகழ்வில் 'இணக்கமான வாழ்வு இனிய சுவனம்' எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் எம்.எல்.அப்துல் வாஜித் (இஸ்லாஹி)யும், 'மனித சமூகத்தின் ஆக்கமும் அழிவும்' எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் எம்.எச்.எம்.உஸைர் (இஸ்லாஹி)யும், 'நன்மை செய்யும் சமூகமே வெற்றி பெறும் சமூகம'; எனும் தலைப்பில்  இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீர்  அல் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜூல் அக்பரும் உரை நிகழ்த்தினர்.

இவ் இஜ்திமாவில் பெருமளவிலான ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.




No comments

Powered by Blogger.