சர்வதேச கிரிக்கட் போட்டியில் இலங்கைக்கு அபகீர்த்தி - ராவணா பலய சீற்றம்
சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் செம்பியன்ஸ் லீக் கிரிக்கட் வெற்றிக்கிண்ண ஆரம்ப நிகழ்வின் போது இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. இதற்கு சிறிலங்கா கிரிக்கட் நிறுவனம் பொறுப்பு கூறவேண்டும் என்று ராவணா பலய அமைப்பு தெரிவித்துள்ளது.
போட்டித் தொடரின் ஆரம்பநிகழ்வின் போது அதில் பங்கேற்றுள்ள 8 நாடுகளின் தேசிய கொடிகள் மைதானத்தின் மத்தியில் எடுத்து செல்லப்பட்டது. அந்த தருணத்தில் போட்டி ஏற்பாட்டாளர்கள் ஒவ்வொரு நாடுகளினதும் சம்பிரதாயத்திற்கும் ஏற்றவாறு பாடல்களை ஒலிபரப்பியிருந்தனர். இலங்கையின் தேசிய கொடி எடுத்துச் செல்லப்பட்ட போது ஹிந்தி பாடல் ஒன்றின் பகுதி ஒலிபரப்பப்பட்டது.
அந்த பாடல் ஒலிபரப்பப்படுவதற்கு முன்னர் இலங்கை கிரிக்கட் போட்டியாளர்களுடன் சென்றுள்ள அதிகாரிகள் ஆராய்ந்திருக்கலாம் என்று ராவணா பலய அமைப்பின் இணைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளையதினம் சிறிலங்கா கிரிக்கட் நிறுவனத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கை கிரிக்கட் அணி இதற்கு முன்னர் பங்கு கொண்ட போட்டிகள் சிலவற்றிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன. 2011 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஒருநாள் போட்டியின் போது, இலங்கையின் தேசிய கீதம் பல குறைபாடுகளுடன் பாடப்பட்டிருந்தது. அங்கு இலங்கையின் தேசிய கீதம் இவ்வாறு தொனி விலகலுடன் பாடப்பட்டது.
இதேவேளை கடந்த வருடம் அவுஸ்திரேலியாவில் பொக்சிங் தின டெஸ்ட் தொடர் போட்டியிலும் இலங்கை அணி பங்குகொண்டது. அதில் இரண்டு போட்டிகளில் இலங்கையின் தேசிய கீதம் பிழையாக பாடப்பட்டது.
இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் முதுகெலும்பு இல்லாதவர் என்று தெரிவித்துள்ள வீடமைப்பு மற்றும் நிர்மாண பொறியியல் துறையமைச்சர் விமல் வீரவங்ச அந்த தொடரிலிருந்தே விலகியிருக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஐசிசி கிரிக்கெட் போட்டிகளின் ஆரம்ப விழாவில் இலங்கை வீரர்களை அறிமுகப்படுத்தும்போது பின்னணியில் ஹிந்தி இசை ஒலிபரப்பப்பட்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
Unmayil ithu thavirkkap pada vendiyathu kandikkap padavendiyarhu enraaha karuthinaal avarhalidam pesalaam. Ithatkaahavum aarpaattama?
ReplyDeleteIPL itku poonavar halukku avinda mutteyaal adippoom inru kuuriya varhal. Shumma thaan