சிரியாவின் முக்கிய இராணுவ தளத்தை நுஸ்ரா போராளிகள் கைப்பற்றினர்
சிரியாவின் தென்கோடி நகரான தேரா நகரில் அதிபர் ஆசாத்தின் முக்கிய ராணுவத்தளம் அமைந்துள்ளது. இந்த ராணுவத்தளத்தை கைப்பற்றும் நோக்கில் போராளிகள் கடந்த இரண்டு வாரங்களாக அதிபரின் படையினருடன் கடும் சண்டையில் ஈடுபட்டனர்.
இறுதியாக, தேராவின் முக்கியச் சோதனைச்சாவடியை நேற்று போராளிகள் கைப்பற்றி விட்டதாக பிரிட்டனை சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது. தேரா நகருக்கான மிக முக்கிய தளத்தை நூஸ்ரா பிரிவு போராளிகள் கைப்பற்றியுள்ளதால், அந்த நகரம் இனி போராளிகளின் வசம் வந்துவிடும் என்றும் அது கூறியுள்ளது.
இந்த தேரா நகரில் தான் 40 ஆண்டுகால அதிபர் ஆட்சிக்கு எதிராக கடந்த 2011-ம் ஆண்டு, மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. அதிபர் ஆட்சிக்கு எதிராக நடந்த அந்த அமைதிப் போராட்டம் நாடு முழுவதும் பரவி, இன்று அது உள்நாட்டு போருக்கு வழிவகுத்தது என்றும் கூறப்படுகிறது.
நேற்றிரவு ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என 10 பேர் உயிரிழந்ததாக கண்காணிப்பு அமைப்பு தெரிவிக்கின்றது. அமெரிக்கா, போராளிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருவதால், அதிபர் படை தோல்வியுறும் என்றும் கூறப்படுகிறது.
Alhamdu lillah
ReplyDelete