ரமழான் வதிவிட பயிற்சி நெறி
(மொஹமட் பாயிஸ்)
புனித ரமழான் மாதத்தில் எமது பிள்ளைகளை ஈமானிய ஒளியில் முழு நேர வணக்கமுடையவர்களாக மாற்ற வேண்டி பராஇமுல் ஈமான் கலாசார நிலையம் ரமழான் முழுவதும் தங்குமிட வசதிகளுடன் வணக்க வழிபாடுகளை செயல்முறையுடன் கற்றுக்கொடுப்பதற்கான வதிவிட பயிற்சி நெறி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இப்பயிற்சி நெறியில் தஜ்வீத் சட்டங்களுடன் அழகிய முறையில் அல்-குர்ஆனை ஓதக் கற்றுக்கொடுத்தல், குறிப்பிட்ட சூராக்களை மனனமிடச் செய்தல்' வணக்கங்களுக்கான வழிகாட்டல்கள், ஆன்மீக பண்பாட்டு விருத்தி, நபி வழி வரலாறு, நாளாந்த துஆக்கள்' நேர முகாமைத்துவம், இஸ்லாமிய ஆளுமையின் அறிமுகம்' இஸ்லாமிய எழுச்சியில் இளைஞர்களின் பங்களிப்பு' இலட்சியத்தைத் தீர்மானித்தலும் திட்டமிடலும்' உளவிருத்திக்கான பயிற்சிகள் இப்பயிற்சி நெறியில் 14 தொடக்கம் 16 வரையிலான வயதெல்லையுடைய மாணவர்கள் சேர்த்து கொள்ளப்படவுள்ளார்கள். ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. அதற்கான நேர்முகப்பரீட்சை 30-06-2013 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00- பி.ப 12.00 மணி வரை இல. 40ஃ7, அம்பகஹ சந்தி, கொத்தட்டுவையில் அமைந்துள்ள பராஇமுல் ஈமான் கலாசார நிலையத்தில் நடைபெறவுள்ளது. மேலதிக விபரங்களுக்கு அதிபர் : 0777-565051 செயலாளர் : 0773-989852' வகுப்புகள் 12-07-2012 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
Post a Comment