Header Ads



இலங்கையில் ஆளில்லா உளவு விமானம் - முஸ்லிம் சகோதரரின் மகத்தான பங்களிப்பு

(ஏ, எம் எம் முஸம்மில்)

   இலங்கையில் முதல் முறையாக ஆளில்லா உளவு விமானமொன்று தயாரிக்கப்பட்ட குழுவுக்கு பதுளையை பிறப்பிடமாக கொண்ட   மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட இறுதியாண்டு மாணவரான ஆபித் ருஷ்டி தலைமைதாங்கியுள்ளதுடன், அனுருத்த தென்னகோன், அசோக் அரவிந்த , பசிந்து மதுசங்க, ஹோமேஷ் வத்சலய ஆகிய பொறியியல் பீட நான்கு மாணவர்களும் பங்களித்துள்ளனர். 

பல்கலைக்கழக பேராசிரியர் சுதத் ரோஹனவின் மேற்பார்வையில் இந்தஆளில்லா உளவு விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது . அமேரிக்கா, இஸ்ரேல் போன்ற வல்லரசு நாடுளில் மாத்திரம் காணப் படும்  இந்த ஆளில்லா உளவு விமான தொழில் நுட்பம், இந் நாட்டில்   தயாரிக்கப்பட்டதானது  இந் நாட்டு தொழில்நுட்ப வரலாற்றில்  மைல் கல்லாக கருதப் படுகின்றது.

 200 மீற்றர் உயரத்தில் பறந்து 12 நிமிட நேரத்திற்கு உளவுப் பணியில் ஈடுபட்டு தகவல்களை வழங்கக் கூடிய வகையில் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.

  இந்த விமானத்திற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட உள்ளது. அனுமதி கிடைத்தவுடன் அனுசரணையாளர்களின் உதவியுடன் விமானத்தை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

   கடுபெத்த பொறியியல் பீட இறுதியாண்டு மாணவர்களான இக்குழு குறிப்பிட்ட இவ்விமானத்தினை மின்கல உபயோகத்துடன் செயட்படகூடியவாரே வடிவமைத்துள்ளனர். இதை எரிபொருள் பாவனையுடன் இயங்கக் கூடியவாறு மேலும் பல தொழில்நுட்பத்துடன் இதை வடிவமைக்கும் செயற்திட்டம் கடுபெத்த பொறியியல் பீட அடுத்த வருட மாணவர்களிடம் ஒப்படஈகப் பட்டுள்ளதாக தெரிய வாருகிரது. 

 இதற்கிடையில் கடுபெத்த பொறியியல் பீடத்தின் இக்கண்டுபிடிப்பின் மூல அதிகார  உரிமத்தை (patent right)  இலங்கை வான் படை கோருவதற்கான முயற்சிகளும் திரைமறைவில் நடப்பதாகவும் தெரிய வருகின்றது, இத்திட்டத்தின் மேற்பார்வையாளராக கடமையாற்றிய பேராசிரியர் சுதத் ரோகன அவர்கள் இலங்கை வான் படை தொழிநுட்ப பிரிவிலும் ஒரு பகுதிநேர விரிவுரையாளராக கடமையாற்றுவதை ஒரு அடிப்படையாக வைத்து இம்முயற்சி நடைபெறுவதாகவும் இதற்கு   பேராசிரியர் சுதத் ரோகன அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.     

குறிப்பு :- இத்திட்டதிற்கு தலைமை தாங்கிய ஆபித் ருஷ்டி அவர்கள் பதுளை சகோதரர் சாதுல்லா அவர்களின் மகனாவார், இவரின் மூத்த சகோதரர் பிஷார் ஹாதி யும் கடுபெத்த பொறியியல் பீடத்தில் அண்மையில்  பட்டம் பெற்ற ஒரு பொறியியலாளர் ஆவார் . இவரின் இளைய சகோதரர் அஹ்மத் ஒசாமாவும் கொழும்பு வைத்திய பீட மாணவராவார். இவர்கள் மூவரும் க போ த (சா/த), (உ /த) பரீட்சைகளிலும் தேசிய மட்டத்தில் பல திறமைகளை காட்டிய , சிங்கள மொழிமூலம் தமது கல்வியை தொடர்ந்தவர்கள் என்பது ஒரு விஷேட அம்சமாகும், சகோதரர் சாதுல்லா தமது பிள்ளைகளின் கல்வியை சிங்கள மொழி மூலம் தொடரச் செய்ததில் ஒரு அர்த்தமுள்ளது என்று தற்போது புலனாகிறது. ஆனால் முறையான மார்க்க பின்னணி இல்லாத குடும்ப அமைப்புகளில் இது எந்தளவு சாத்தியப்பாடுள்ளது என்றும் . கலாசார ஒழுக்கத்துடனான பெண்கள் கல்வியில் இதன் சாத்தியப் பாடுகள் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.   

   தமிழ் மொழிமூல முஸ்லிம் கல்வியின் எதிர்காலம் கேள்விகுரியாக்கப் பட்டு நத்தை வேகத்தில் நகரும் பதுளை  போன்ற பிரதேசங்களில் வாழும்  முஸ்லிம்களின் எதிர்கால கல்வி முன்னேற்றத்திற்கு  இவர்களின் அடைவுகளில் ஒரு விடைதெரிந்தாலும், பௌத்த மேலாதிக்க வாதம் தலைதூகியுள்ள  இக்காலத்தில் இதன் சாத்தியபாடுகள் பற்றியும், சவால்களுக்கான தீர்வுகள் பற்றியும் சிந்தித்து செயலாற்ற வேண்டிய காலம் என்பதையும் தமிழ் மொழி மூல முஸ்லிம் கல்வியை முன்னேற்ற வேண்டிய காலத்தின் தேவையையும் நாம் உணர்வோமா...?


8 comments:

  1. Maa Shaa Allah..........proud of you brother......May Allah bless you with more success

    ReplyDelete
  2. முஸ்லிம்கள் எம்மொழியில் படித்தால் என்ன? முன்னேரினால் போதாதா? சிங்களவர்களுக்கு இனவெறியை அறிமுகப்படுத்தியதே தமிழந்தானே.... அஷ்ரப் போன்ற மூன்றாத் தர அரசியல்வாதிகளும் இந்த முறையைத் தானே பின்பற்றினார்கள்.

    ReplyDelete
  3. EXPOSING THE TALENT IS GOOD.BUT IN THIS CASE HE IS A MUSLIM.HE WILL BE CAUGHT IN EAGLE EYE.OTHER INVENTION OF COURSE NO MATTER.BUT THIS IS DIFFERENT CASE.MAJORITY OF READERS MAY UNDERSTAND WHAT I MEAN.

    ReplyDelete
  4. Al Hamthulillah, but kavam. ippothu seiyyach cholluvargal pinner ungalukkum Al kaithavukkum Thodarfu ullathu. ankuthan neengan payitchiyai eduththulleerhal entru thookath thodankuwarhal. yaraiththan namba mudiyum. ellavatrukkum allah pothumanavan.

    Nowfer

    ReplyDelete

Powered by Blogger.