Header Ads



மக்கள் இன்று எம்மிடமிருந்தும் அபிவிருத்தியினை எதிர்பார்க்கின்றனர் - ரவூப் ஹக்கீம்

(vi) தலைவர் அஷ்ரப்புடைய காலத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் கோட்டையாக இருந்த மருதமுனை முஸ்லிம் காங்கிரஸின் தளமாக என்னால்தான் மாற்றியமைக்க முடிந்துள்ளது என முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

மருதமுனை அல்-மதீனா வித்தியாலயத்தில் திதுலன வேலைத்திட்டத்தின் கீழ் 20 லட்சம் ரூபா செலவில் அமையவுள்ள கணினி கூட கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதிபர் ஏ.ஆர்.நிஃமத்துல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அணிக்கான கல்முனைப்பிராந்திய அமைப்பாளர் சறோ தாஜிதீன் உள்ளிட்ட பலர் அதிதிகளாக கலந்துகொண்டனர். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மக்கள் இன்று எம்மிடமிருந்தும் அபிவிருத்தியினை எதிர்பார்க்கின்றனர். அதற்கான பல்வேறு திட்டங்களை நாமும் முன்னெடுத்து வருகின்றோம். சுனாமிக்குப் பின்னர் தகரக் கொட்டகைக்குள் ஆரம்பிக்கப்பட்ட மதீனா வித்தியாலயத்தில் இவ்வாறானதொரு கட்டிடத்தை ஒதுக்கீடு செய்வதில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம். சுனாமியின் பின்னரான அமைவிடம் தொடர்பில் இப்பாடசாலை பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்த நிலையிலும் நாம் மிகவும் நிதானமாக அவற்றையெல்லாம் அவதானித்தோம். இன்று அதன் பிரதிபலிப்புக்களைப் பார்க்கும் போது பூரிப்பு ஏற்படுகின்றது.

முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய தளமாக கல்முனை என்றும் இருந்து வரும் நிலையில் தலைவரின் காலத்தில் ஐ.தே.க.வின் கோட்டையாக இருந்து எம்மை ஏற்றுக்கொள்ளாத மக்களையெல்லாம் இன்றும் எம் பக்கம் அழைத்து வந்திருக்கின்றோம். மருதமுனை மக்களின் பெரும் பகுதியினர் எம்மோடு கைகோர்க்கும் முக்கிய தளமாக இக்கிராமம் மாறி இருக்கின்றது. இது என்னுடைய தலைமைத்துவத்தினாலேயே முடிந்திருக்கின்றது. இவ்விடயம் ஆரோக்கிமானதாகவோ சிலவேளை துரதிஷ்ட வசமானதாகவோ இருக்கலாம்.

பாடசாலை நிருவாகத்தினர், தாய்மார்கள், பெற்றோர்கள் பெருமளவில் வருகை தந்திருக்கும் இந்நிகழ்வு எனக்கு சந்தோஷமளித்திருக்கின்றது. எமது அரசியல் மற்றும் சமூகம் சார் முன்னெடுப்புக்கள் குறித்து விரைவில் மனம் திறந்து பேசவுள்ளோம் என்றார்.

6 comments:

  1. Are you telling that you are the better leader than Ashroff. Very good statement, everyone believe it.

    ReplyDelete
  2. மிகவும் தவறான பொய்யான தகவலாகும். தலைவர் அஷ்ரப் காலத்திலேயே மருதமுனை முஸ்லிம் காங்கிரஸ் கோட்டைதான்.

    இந்த தகவல் தலைவர் அஷ்ரப் அவர்களையும் மருதமுனை காங்கிரஸ் போராளிகளிகளையும் ஆதரவாளர்களையும் மலினப்படுத்துவதுமாக அமைந்த்துள்ளது. தலைவர் ஹக்கீம் அவர்கள் இந்த தவறான தகவலுக்காக மக்களிடம் தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டும்.

    ReplyDelete
  3. MAKKAL AFIVRUTHHIYAI ETHIR PAARKKIRAARHALO ILLAYO, NEENGALUM UNGAL SAHAAKKALUM AMAICHHUP PATHAVIYAI ETHIRPAARKKIREERHAL.......

    ReplyDelete
  4. நீங்களெல்லாம் அரசாங்கத்துடன் சேர்ந்து நல்ல அபிவிருத்தி அடைந்திருப்பதால்தான் பாவப்பட்ட மக்களும் உங்களிடமிருந்து இப்படியான பிச்சை அபிவிருத்திகளை எதிர்பார்க்கும் நிலைக்கு வந்திருக்கிறார்களாக்கும்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  5. முஸ்லிம் காங்கிரசின் வரலாறு தெரியாத ரவுப் ஹக்கீம் முட்டாள் தனமான அறிக்கை களை விடக்கூடாது தெரியாவிட்டால் ஹசன் அலியிடம் கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும் சன்லைட் பெட்டி ஒன்றுக்குள் அதன் ஆரம்ப ஆவணங்கள் மருதூர்கன்யின் வீட்டில்தான் கிடந்தன.அங்கிருந்துதான் அதனை ஹசன் அலி சுமந்து வந்தார் மருதமுனைதான் slmc யின் புகலிடம் மர்ஹூம் அஷ்ரபினை புலிகள் சுடுவதற்கு முயன்றபோது மருதமுனைதான் பாதுகாப்பளித்து அஷ்ரப்பை விட ஹக்கீம் கெட்டிக்காரர் என்று கூற விளைகிறாரா ? இதைவிட நன்றியற்ற செயல் வேறெதுவும் இல்லை

    ReplyDelete
  6. மருதமுனை ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையாக இருந்தது அம்மண்ணின் மைந்தன் மூத்த தலைவன் செனட்டர் மசூர் மௌலானா அக்கட்சியில் இணைந்த காலம் முதல் அக்கட்சியை விட்டு விலகி முஸ்லிம் சமூகத்துக்காக முஸ்லிம் காங்கிரஸில் இணைந்த காலம் வரைதான் என்பதை மருதமுனை மண்ணோ அந்த மக்களோ மறந்திருக்கமாட்டார்கள். அவ்வூர் ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையாக இருந்த காலத்தில் அந்த மூதவரால் கண்ட அபிவிருத்திகளில் ஒரு துளிகூட இன்று காணமுடியவில்லை என்பதை மனசாட்சியுள்ள மருதமுனை மகன் எவனும் மறக்கமாட்டான்..
    அரசியல் வங்குரோத்தின் உச்ச நிலையில் இருக்கும் ஹகீம் அவர்களே அருவருக்கத்தக்க அறிக்கைகளை விட்டு ஆத்திரமூட்ட வேண்டாம்..

    ReplyDelete

Powered by Blogger.