பௌத்த இராணுவக் குழுவாக உருவாக பொதுபல சேனா முயற்சிக்கிறது - ராஜித
பொதுபல சேனா அமைப்பின் நடவடிக்கைகளை அமைச்சர் ராஜித சேனாரட்ன விமர்சனம் செய்துள்ளார். பௌத்த இராணுவக் குழுவாக உருவாக பொதுபல சேனா முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.பௌத்த தர்மம் இனவாதத்தை போஷிக்கவில்லை எனவும், பொதுபல சேனா போன்ற அமைப்புக்கள் கடும்போக்குடைய கொள்கைகளை பின்பற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் நடவடிக்கைகள் பௌத்த நெறிமுறைகளுக்கு முரணானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பொதுபல சேனாவின் நடவடிக்கைகளை பார்வையிட புத்த பகவான் உயிரோடு இல்லாமை நல்லதே என அவர் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி வன்முறைகள் இடம்பெற்ற காலத்திலேயே தாம் அரசியலை முடிவுறுத்திக்கொள்ளவில்லை பொதுபலசேனா அமைப்பின் எச்சரிக்கையை பெரிதாக கருதப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 30 வருடங்களுக்கு முன் உங்களை நேரில் சந்தித்தபோது காணப்பட்ட அதே வீரம், அதே தன்னம்பிக்கை, அதே நெஞ்சுரம் எல்லாம் இன்னமும் அப்படியே உங்களிடம் இருக்கிறதே..!
ReplyDeleteஎன்ன செய்யலாம்;...? அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கும் உங்களுக்கு இருக்கும் இவை எதுவுமே எமது லேபல் முஸ்லிம் கட்சித் தலைமைகளிடமும், பிரதிகளிடமும் இல்லையே..!
நன்றிகளும், பாராட்டுக்களும் டாக்டர் ராஜித சேனாரத்ன அவர்களே..!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
உண்மைதான் உத்தியோக பற்ரற்ற போலீஸ்காரர்கள் என அவர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர் . போகிறபோக்கில் எதுவும் நடக்கலாம். எமக்கு உங்களைப் போன்றவர்களின் உதவி மிக முக்கியம் .
ReplyDeleteThanks to Dr.Rajitha
ReplyDeleteDr.Rajitha mp oyagena hithanakota kodak santosai
ReplyDelete