இன்னொரு பாகிஸ்தானாக இலங்கை மாறுவதைத் தடுக்கவே முயற்சிக்கிறோம் - இந்தியா
இன்னொரு பாகிஸ்தானாக சிறிலங்கா மாறுவதைத் தடுக்கவே, சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு இந்தியா பயிற்சி அளித்து வருவதாக இந்திய மத்திய இணை அமைச்சர் சுதர்சன் நாச்சியப்பன் தெரிவித்துள்ளார். வெலிங்டனில் சிறிலங்கா படைஅதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்புத் தெரிவிக்கப்படுவது குறித்து, கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“சிறிலங்காவில் 49 இலட்சம் தமிழ்க் குடும்பங்கள் வாழ்கின்றன. அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ளது. எனவே இலங்கை தமிழர் பிரச்சினையில் நாம், சிறிலங்கா அரசாங்கத்துடன் சமரசமாகத் தான் செல்ல வேண்டும். சிறிலங்காப் படை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்க இந்தியா மறுப்புத் தெரிவித்தால், அந்த அதிகாரிகளை சீனாவுக்கு அனுப்புவார்கள்.
அது இந்தியாவின் எதிரிகளைப் பலப்படுத்துவதாக அமையும். இந்தியா ஏற்கனவே பாகிஸ்தானால் பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. இன்னொரு பாகிஸ்தானாக சிறிலங்கா உருவெடுப்பதை யாரும் விரும்பமாட்டார்கள்.
இலங்கையில் 22 இலட்சத்து 70 ஆயிரத்து 924 இலங்கைத் தமிழர்களும் 8 இலட்சத்து 42 ஆயிரத்து 323 இந்தியத் தமிழர்களும் என மொத்தமாக 31 இலட்சத்து 13 ஆயிரத்து 247 தமிழர்கள் வாழ்வதாக தொகை மதிப்பு புள்ளி விபரத் திணைக்களம் தகவல் வெளியிட்டிருக்கும் நிலையில் இந்திய இணை அமைச்சர் சுதர்சன் நாச்சியப்பன் 48 இலட்சம் தமிழ் குடும்பம் சிறிலங்காவில் வாழ்வதாகக் கூறுகின்றாரே எங்கிருந்து அந்தக் கணக்கைப் பெற்றார்? அரசியல்வாதிகள் தகவல்களைக் கூறும்போது சரியானதைக் கூற வேண்டும் என்பதை மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
ReplyDeleteMinister Sutharsan is a mental person. He must be brought from India to Angoda hospital.
ReplyDelete