Header Ads



பொதுபல சேனா + முஸ்லிம் அமைச்சர்கள் குறித்து, ஆஸாத் சாலிக்கு ஏற்பட்டுள்ள சந்தேகங்கள்..!

இலங்கையில் மிகப் பெரிய கஷினோ நிலையத்தை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன. இது பற்றி நேற்று (04.06.13) பாராளுமன்றத்திலும் அறிவிக்கப்பட்டு விட்டது. புத்ததர்மம் ஆட்சி புரிய வேண்டும் என்று கோஷமிடும் பொது பல சேனாவும் ஏனைய அமைப்புக்களும் எங்கே? என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்?அவர்கள் இதை அனுமதிக்கப் போகின்றார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அஸாத் சாலி.

இன்று காலை கொழும்பில் தேசிய ஐக்கிய முன்னணி செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசும்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். அங்கு அவர் தொடர்ந்து பேசும்போது நாட்டில் இனவாதத்தையும் மதவாதத்தையும் விஷம் போல் கக்கி மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவித்துக் கொண்டிருந்த அவர்களுக்கு தற்போது தேசிய ரீதியில் நிறைவேற்ற வேண்டிய ஒரு பொறுப்பு உள்ளது.

இந்த நாட்டின் கலாசாரத்துக்கு பாரிய தீங்கினை ஏற்படுத்தி மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு குந்தகத்தை ஏற்படுத்தக் கூடிய இந்த கஷினோக்கள் மற்றும் மதுபான சாலைகள் விபசார விடுதிகள் என்பனவற்றுக்கு எதிராக பொது பல சேனா உண்மையிலேயே வீதியில் இறங்கினால் அவர்களுக்கு ஆதரவு வழங்க நாமும் தயாராக உள்ளோம்.

ஹலால் சான்றிதழை இல்லாமல் ஆக்க,பள்ளிவாசல்களை தகர்க்க அரசாங்கம் சரியான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் தாங்கள் உத்தியோகப்பற்றற்ற பொலீஸாராக மாறப் போவதாக கொக்கரித்த பொது பல சேனா தற்போது இந்த கஷினோ, சூதாட்ட மற்றும் விபசார விடுதிகளுக்கு எதிராக என்ன செய்யப் போகின்றார்கள்? ஏன்பதைக் காண நாம் ஆவலாக இருக்கின்றோம்.

அரசாங்கம் இந்த நாட்டை தற்போது சீரழிவை நோக்கி தலைகீழாக கொண்டு செல்கின்றது. வட மாகாண சபையை ஸ்தாபிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி வெளிவிவகார அமைச்சருக்கு உத்தரவிடுகின்றார். ஆனால் இது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியவர் அதற்குப் பொறுப்பான அமைச்சர் அதாவுல்லாஹ் அல்லது நீதி அமைச்சர் என்ற வகையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்.அரசாங்க பேச்சாளராக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பணியாற்றுகின்றார். இப்படி எல்லாமே தலைகீழாகவே நடக்கின்றது.

வட மகாண சபை அமையக் கூடாது, 13வது திருத்தச் சட்ட மூலம் தேவையில்லை என்றெல்லாம் கூச்சலிடுகின்றவர்கள் ஏனைய பகுதிகளில் மாகாண சபை முறையின் நன்மைகளையும் வரப்பிரசாதங்களையும் அனுபவித்துக் கொண்டே இவற்றைக் கூறுகின்றமை வேடிக்கையானதாகும். இவர்கள் என்னதான் கூச்சலிட்டாலும் இது தொடர்பான இறுதி முடிவை பாராளுமன்றமே எடுக்க வேண்டும். அதோபோல் காணி விவகாரம் தொடர்பான முடிவுகளையும் எடுக்க வேண்டியவர் இறுதியில் ஜனாதிபதியே ஆவார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஒரு காலத்தில் மாகாண சபைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. பாரிய ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டது. ஆனால் இன்று அதன் பலன்கள் அனைத்தையும் அனுபவிக்கின்றது.

மாகாண சபை தேர்தல் குறித்தும் அதிகாரப் பகிர்வு குறித்தும்,13வது திருத்தச் சட்டமூலம் குறித்தும் தற்போது அரசுக்குள் பெரும் குழப்பமும் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது. அரசின் பங்காளிக் கட்சிகள் இதனை எதிர்க்கின்றன. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இந்த விடயத்தில் ஜனாதிபதியின் கருத்துக்களுக்கு முற்றிலும் மாறான கருத்துக்களை ஒரு அரச அதிகாரி என்ற நிலையையும் மீறி வெளியிட்டு வருகின்றார். மறு புறத்தில் அமைச்சர்கள் கெஹலிய றம்புக்வெல,அநுர பிரியதர்ஷன யாப்பா உட்பட இன்னும் பலர் 13வது திருத்தச் சட்டம் நீக்கப்படமாட்டாது, தற்போதைய ஏற்பாடுகளின் கீழேயே வட மாகாண சபை தேர்தலும் நடத்தப்படும் என்று கூறுகின்றனர்.யார் என்ன சொல்லுகின்றார்கள் என்பது புரியாமல் மக்கள் குழம்பிப் போய் உள்ளனர். 

6 comments:

  1. நாட்டின் கலாச்சாரம் பற்றி பேசித்திரியும் பொது பல சேனா ,,
    இந்த மிகப்பெரிய கலாசார சீர்கேட்டு நிலையத்துக்கு ஆதரவளிக்க போகிறார்களா.....?

    ReplyDelete
  2. என்ன? ஒன்றும் புரியாமல் பேசிவிட்டீர்களே. பொது பல சேனாவுக்கு இந்நாடோ, இந்நாட்டு மக்களோ எந்தக் கேடு கெட்டாலும் என்ன பிரச்சினை? விபச்சார விடுதியால் அவர்களுக்கு என்ன பிரச்சினை? மது விற்பனையில் என்ன பிரச்சினை? இவைகள் இருப்பது தான் அவர்களுக்கு நல்லது. இலேசாக யாரையும் காணாமலாவது கொஞ்சம் தொட்டுக் கொள்ளலாமே. முஸ்லிம்களைத் தட்டுவது மட்டுமே அவர்களது முழு நோக்கம். அப்படியில்லா விட்டால் சுத்தம் சுத்தமான பொய்களை இட்டுக்கட்டி பகிரங்க மேடைகளில் ஞான சார தேரை கத்தியிருக்குமா? அல்லாஹ்வின் அழிவு அவனுக்கு விரைவில் இறங்கட்டும்.

    ReplyDelete
  3. BBS is a Governemt Agent. The Proxy of MR & Co. for racism and descrimations against Muslims Of SL.Rauf and his group Hafiz ,Hisbullah are licking the shoes of MR. Our king is Br. Azad Salih.

    ReplyDelete
  4. its true, their target it to destroy muslim community in srilanka, for that they wanted a strong reason to motivate the buddist people aganist us. as monks they could say they need buddist kingdom, buddist low, etc... but non of them are true,

    ReplyDelete
  5. Brother Azath Sally Back in action!

    ReplyDelete
  6. commets yarayum thakkamal veruppai etpaduthamal irukkattum.pirachinaihalai puthisalithanamaha porumaiyaha panpahaha kayyaluvom appohthu mattume allah emmodu iruppan.illavittal namakkum mattavarhalukkum vittiyasam illamal poy vudm.ithuthan allavum nabiyum virumpum valiyaha irukkum enru ninaikkiren insha allah

    ReplyDelete

Powered by Blogger.