Header Ads



மட்டக்களப்பில் புத்தர் சிலை - பௌத்த தேரர் மனித உரிமை ஆணைக்குழுவிடம் புகார்

(அப்துல்லாஹ்)

மட்டக்களப்பு  பிள்ளையாரடி வளைவில் புத்தர் சிலை நிறுவும் விவகாரத்தை மட்டக்களப்பு மங்களராமய விஹாரையின் விஹாராதிபதி  அம்பிட்டியே சுமணரத்ன தேரர் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

இதுவிடயமாக நேற்று மாலை 11.06.2013  எழுத்து மூலமான முறைப்பாடொன்றை மட்டக்களப்பு மங்களராமய விஹாரையின் விஹாராதிபதி  அம்பிட்டியே சுமணரத்ன அவர்கள் தங்களிடம் கையளித்துள்ளதாக மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் இ. மனோகரன் தெரிவித்தார்.

இதனிடையே இந்த விவகாரம் ஏற்கெனவே மட்டக்களப்பு நீதிமன்றத்தின் கவனத்திற்கு பொலிஸாரினால் கொண்டு வரப்பட்டு குறித்த இடத்தில் புத்தர் சிலை நிறுவுவது பொதுத் தொல்லையையும் சமூக அமைதிக்குப் பங்கத்தையும் ஏற்படுத்தும் என பொலிஸார் தமது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிந்ததன் பேரில் குறித்த இடத்தில் புத்தர் சிலை வைப்பதற்கு  தடை விதித்து அது தொடர்பான வேலைகளை  நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.