Header Ads



ரவூப் ஹக்கீம் ஏன் கலந்துகொள்ளவில்லை..?

இலங்கையில் மாகாணசபை முறையை மாற்ற இடமளிக்கப் போவதில்லை என்று அரசாங்க அமைச்சர்கள் சிலர் சூளுரைத்துள்ளனர். அவர்கள் கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர்கள் மாகாணசபை முறையை மாற்றியமைக்கும் எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தத்துக்காகவும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை அரசாங்கத்துக்கு வழங்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

ஆளும் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களான வாசுதேவ நாணயகக்கார, ராஜித்த சேனாரத்ன, திஸ்ஸ வித்தாரண, டியு குணசேகர, சந்திரசிறி கஜதீர உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும் இந்த ஊடக சந்திப்பில் பேசினார்கள்.

இவர்களோடு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், ஈபிடிபி தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் கலந்துகொள்வார்கள் என்றும் முன்னர் ஊடகவியலாளர்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் கலந்துகொள்ளவில்லை.

3 comments:

  1. மு.கா. கட்சியும் அதன் தலைமையும் மதில் மேல் பூனை.......????

    ReplyDelete
  2. அதுதான் இவர்களின் வேலை. சந்தர்ப்பத்தில் கழுத்தறுத்துப் பழக்கப்பட்டவர்கள்!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  3. He will not take any action, only the statements, that also to fake Muslim voters.

    ReplyDelete

Powered by Blogger.