ஈரான் தூதுக்குழுவுடன் அமைச்சர் றிசாத் பதியுதீன் சந்திப்பு
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
இலங்கைக்கும்-ஈரானுக்கும் இடையில் காணப்படும் வர்த்தக ரீதியான உறவை வலுப்படுத்துவது தொடர்பில் இரு நாடுகளும் கவனம் செலுத்துவது முக்கியமானது என்று ஈரானின் பெற்றோலிய வளப் பிரதி அமைச்சர் ஹோசைன் பராஹி சுட்டிக்காட்டினார்.
இலங்கை;கு விஜயம் செய்துள்ள பெற்றோலியத் துறை பிரதி அமைச்சர் தலமையிலான குழுவினர் கைத்தொழில்.வணிகத் துறை அமைச்சர றிசாத் பதியுதீனை அமைச்சில் இன்று சந்தித்து கலந்துரையாடினர்.
இலங்கையின் உறவக்கு நல்லதொரு உதாரணமாக இலங்கை தேயிலையினையே ஈரானிய மக்கள் விரும்பி நுகர்வதாகவும்,அதனை தொடராக பெற்றுக் கொள்வது தொடர்பில் தேவையான வசதிகளை இலங்கை அரசாங்கம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அமைச்சர் றிசாத் பதியுதீன் கருத்துரைக்கையில் -
இலங்கைக்கு ஈரான் வழங்கிவருகின்ற உதவிகளுக்கு எமது நாடு நன்றி செலுத்துவதாகவும்,சிரமமான சந்தர்ப்பங்களில் நிதி உதவிகளை வழங்கியமைக்கும் நன்றிகளை தெரிவிப்பதாகவும் கூறினார்.
வர்த்தக மற்றும் கலாசார ரீதியிலான தொடர்புகளை வரவேற்பதாகவும்,அமைச்ச்ர் றிசாத் பதியுதீன் இங்கு வலியுறுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஈரான் நாட்டின் வர்த்தக,கைத்தொழில் பிரதி அமைச்சர் கபாதி,வர்த்தக.கைத்தொழில்.வணித் துறை அமைச்சின் செயலாளர் அநுர சிறிவர்தன,மேலதிக செயலாளர் சீதா செனவி ரதன்,வர்த்தக திணைக்கள பணிப்பாளர் பெர்ணான்டோ ஆகியோரும் இதன் போது பிரசன்னமாகியிருந்தனர்.
Post a Comment