கண்ணத்தில் அடித்த கணவரை மண்ணித்த மனைவி - நீதிபதி மறுப்பு
சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாண நகரங்களில் ஒன்றான சஃப்வா-வில் தன் மனைவிக்கு அறை விட்டுள்ள கணவர் ஒருவர் சிறைப்பட்டுள்ளார்.
பெயர் வெளியிடப்படாத அந்தக் கணவர் ஒரு வாக்கு வாதத்தின் போது அந்த இளம் மனைவியை கன்னத்தில் அறைந்ததாகவும், உடனே அம்மனைவி காவலதிகாரிகளிடத்தில் முறையிட்டதாகவும் அரபு நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மனைவியை அறைந்த கணவருக்குத் தண்டனையாக பத்து நாள் சிறைவாசமும், முப்பது சவுக்கடிகளும் கொடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கணவருக்கு சவுக்கடி கொடுக்கப்படும் போது முன்னிலையாகும்படியும் மனைவியிடம் கோரப்பட்டுள்ளது. 'குடும்பத்தில் நடந்து கொள்வது எப்படி' என்கிற கவுன்ஸலிங் வகுப்புத் தொடர் ஒன்றுக்கும் இதன் தொடர்ச்சியாக கணவர் உட்படுத்தப்பட்டுள்ளார்.
தண்டனைக்கு ஆளாகியுள்ள கணவர் கூறுகையில், "தன் குற்றத்தை ஒப்புக் கொள்வதாகவும், ஆனால் மனைவி தன் பெற்றோரை மதிக்காமல் நடந்து கொண்டதாலேயே தான் மனைவியை அறைய நேரிட்டது" என்று தெரிவித்துள்ளார்.
அரசர் காலித் அறக்கட்டளை என்னும் சவூதி அமைப்பு 'குடும்ப வன்முறை'க்கு எதிராக பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டு வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இச்செய்தியின் திருப்புமுனையாக, அறை வாங்கி கணவருக்கெதிராக முறையீடு செய்து அவருக்குத் தண்டனை பெற்றுத் தந்த மனைவி தன் மாமியாருடன் நீதிமன்றம் வந்து, நீதிபதியிடம் சென்று, தன் கணவனை தான் மன்னித்துவிடுவதாகவும், அவர் மீதான தண்டனைகளை விலக்கிக் கொள்ளும்படியும் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், மனைவியின் முடிவு காலந்தாழ்ந்தது என்று கூறிய நீதிபதி, தாம் விதித்த தண்டனைகள் விதித்தது தான், அந்த தண்டனைகளுக்கு விலக்கில்லை என்று தெரிவித்துள்ளார். inneram
Post a Comment