தெமட்டகொட பொலிஸ் நிலையத்துக்கு முன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பிரதேசவாசிகள் சிலர் தெமட்டகொட பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஹெரோய்ன் போதைப்பொருள் வைத்திருந்தமை தொடர்பில் குறித்த சந்தேகநபர் நேற்றிரவு தெமட்டகொட பகுதியில் கைதுசெய்யப்பட்டிருந்ததாக பிரதேசத்துக்குப் பொறுப்பான பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் இன்று அதிகாலை சுகவீனமுற்ற குறித்த சந்தேகநபர் பொலிஸ் உத்தியோகத்தர்களால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் இதனையடுத்து சந்தேகநபர் உயிரிழந்ததாகவும் பொலிஸ் உயர் அதிகாரி குறிப்பிட்டார்.
பொலிஸார் நடத்திய தாக்குதலில் சந்தேகநபர் உயிரிழந்ததாக பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஆயினும் சந்தேகநபர் மாரடைப்பினால் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Nf
This comment has been removed by the author.
ReplyDeleteநாட்டில அதர்மம் தலைதூக்கி ஆடுகின்றது மக்கள் வாய்மூடி பார்திருந்தால் வேலைக்காகாது வீதியில் இறங்கி ஒவ்வொன்றுக்கும் கோசமிடவேண்டிய கட்டாயமான நிலைமையில் நாம் இருக்கின்றோம் இல்லையானால் நம் அனைவரின் உரிமைகளும் பறிக்கப்படும். படுமோசமான காரியங்கள் மீண்டும் மீண்டும் நடக்கும்.
ReplyDelete