பத்திரிகைத் துறைக்கான டிப்ளோமா பயிற்சி நெறியில் அதிவிஷேட சித்தி
(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
கொழும்பு பல்கலைக் கழகத்தினால் நடாத்தப்பட்ட பத்திரிகைத் துறைக்கான டிப்ளோமா பயிற்சி நெறியின் பெறுபேறுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படிப் பரீட்சையில் தோற்றியவர்களில் மூன்று மொழிகளிலும் 13 பேர் அதிவிஷேட சித்தி பெற்றுள்ளதுடன் மேலும் 64 பேரும் சித்தியடைந்துள்ளனர்.
இவர்களில் சிங்கள மொழியில் 8 பேரும், தமிழ் மொழியில் மூன்று பேரும் ஆங்கில மொழியில் இரண்டுபேரும் அதிவிஷேட சித்திபெற்றுளமை குறிப்பிடத்தக்கது.
ஊடகவியலாளர் ஏ.எஸ்.எம்.ஜாவித் மற்றும் எம்.ஐ.இஸட். ஹிமாயா, எம்.எஸ்.எம்.றிஷான் ஆகியோரே தமிழ் மொழி மூலம் அதிவிஷேட சித்தி பெற்றவர்களாகும்.
வாழ்த்துக்கள்!
ReplyDeleteமுஸ்லிம் சமூகத்தின் ஊடகப் போராளிகளாக உங்களின் எதிர்காலப் பணிகள் சிறக்கட்டும்!
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-