Header Ads



சாய்ந்தமருது, காரைதீவு தோணா அபிவிருத்தி - இன நல்லுறவை மேம்படுத்தும் திட்டம்

(ஏ.எல்.ஜுனைதீன்) 

சாய்ந்தமருது முஸ்லிம்களையும் காரைதீவு தமிழர்களையும் பெரும்பான்மையாகக் கொண்ட இலங்கையின் தென் கிழக்கேயுள்ள பழம் பெரும் ஊர்களாகும். இவ்வூர் மக்களிடையே சமய ரீதியான வேறுபாடுகள் காணப்பட்ட போதும் அவர்களுடைய நாளாந்த வாழ்க்கை முறைகளும் மனோபாவங்களும் பெரும்பாலும் ஒருமித்து இருப்பதைக்காணலாம். இதற்கான காரணியாக இவ்விரு இனங்களையும் இணைக்கும் தாய் வழிப் பரம்பரையான முக்குக குலத்தைக் காணமுடிகின்றது. 

கடந்த மூன்று தசாப்தங்களுக்கு முன் மிக அந்நியோன்யமாகவும் ஒருவருக்கொருவா ஒத்தாசையாகவும் வாழ்ந்த இவ்விரு சமூகமும் பயங்கரவாதச் சூழலில் சந்தேகத்துடனும் காழ்ப்புணாச்சியடனும் ஒருவரை ஒருவர் நோக்கத் தொடங்கினர்;. இதனால் அவர்களிடையே இருந்த நல்லுறவும் அமைதியும் தொலைந்து போனது. ஆயினும் தற்போதைய சமாதானச் சூழலிலே அவ்வுறவு மீண்டும் மலரத் தொடங்கியுள்ளது. இதனை மேலும் வலுவூட்ட பல நிகழ்ச்சித்திட்டங்கள் அவசியமாகவுள்ளன.
தோணாவின் வரலாறு

காரைதீவு தெற்கு எல்லையில் உள்ள வெட்டுவாய்க்காலில் இருந்து ஆரம்பித்து சாய்ந்தமருது ஒஸ்மன் வீதிக்கு அருகாமையில் கடலுடன் சங்கமிக்கும் பிரதான வடிச்சல் வாவியே தோணா அல்லது தொடுவாய் அல்லது கரச்சை எனப் பல பெயர்களினால் அழைக்கப் படுகின்றது. இதன் நீளம் சுமார் ஐந்து கி.மீ ஆகும்.

இத்தோணா சில பகுதிகளில் மிக விசாலமாகவும் சில இடங்களில் மிக ஒடுக்கமாகவும காணப்படுகின்றது. இற்றைக்கு ஐம்பது வருடங்களுக்கு முன்னர் காணப்பட்ட இத்தோணாவின் அகலம் தற்போது பன்மடங்கு குறைந்தவிட்டது. அக்காலத்தில் இத்தோணாவின் இருமருங்கிலும் பல வகையான மரங்களும் (தென்னை, மா, பாலை என்பன) செடி கொடிகளும் (கிண்ணை,தாளை,தண்டல், சாப்பை பன் என்பன) காணப்பட்டன. இவை வெள்ளப் பெருக்கின்போது தண்ணீர் ஊருக்குள் செல்லாது அரண் போல் பாதுகாத்தன.

தோணாவின் முக்கிய பிரயோசனம் மாரிகாலங்களில் வழிந்தோடும் நீரை கடலிற்குள் செலுத்துவதன் மூலம் ஊருக்குள் வெள்ளப்பெருக்கைத் தவிர்த்தலாகும். இதற்காக மாரிகாலங்களில் முகத்துவாரம் ஊhமக்களால் வெட்டப்படும்.

முற்காலத்தில் தோணா பின்வரும் ஏனைய நடவடிக்கைளுக்கும் பிரயோசனப்பட்டது.

1.மீன்படி, இறால் வளர்ப்பு
2.உப்பு வடித்தல் (இங்கு வடிக்கப்பட்ட உப்பு கண்டி மன்னனுக்கும் அன்பளிப்பாக வளங்கப்பட்டுள்ளது)
3.தென்னை ஓலைகள் இழகவைத்து கிடுகு இளைத்தல்
4.நீச்சல் பயிற்ச்சிகளும் நீர் விளையாட்டுகளும்
5.படகு ஓட்டப் பழகுதலும் படகு ஓட்டப் போட்டிகளும்
தற்போது இத் தோணாவும் அதனை அண்டிய பிரதேசங்களும் குப்பை கூழங்கள் கொட்டும் இடங்களாகவும சுற்றாடல் சுகாதாரத்துக்குப் பங்கமான பிரதேசங்களாகவும் காட்சியளிக்கின்றன. மேலும் இத் தோணா பாதுகாப்பற்றதாக உள்ளதால பலர் இதற்குள் தவறி விழுந்து மரணித்தும் உள்ளனர்.

2004 சுனாமியின்போது தோணாவுள் பிரவேசித்த கடல் அலைகள் தோணாவின் இருமருங்கிலும் காணப்பட்ட செடி கொடிகளினால் ஆன அரண் இல்லாததனால் இலகுவாகவும் வேகமாகவும் ஊருக்குள் பிரவேசித்து பலத்த சேதங்களை விழைவித்தது. 

எதிர்காலத்தில் இத்தோணாவை சிறந்த முறையில் அபிவிருத்தி செய்து இதனைப் பாதுகாப்பானதாகவும் பொழுது போக்குக்கான கேந்திரமாகவும் மாற்ற வேண்டும். இதன் மூலம் மக்களுக்கு பொருளாதார ரீதியாகவும் சுற்றாடல் சுகாதாரம் ரீதியாகவும் பல நன்மைகள் கிட்டுவதோடு இரு ஊர் மக்களுக்கிடையே நல்லுறவுகள் மேலும் வலுப்பெறும்.

2005ஃ2006 காலப்பகுதியில் சுனாமியின் பின்னர் கல்முனை மாநகர அபிவிருத்தி தொடர்பாக ஆராய்ந்த ஜப்பான் நாட்டைச் சேர்ந்த துiஉய அமைப்பு இத்தோணாவை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் ஒன்றைத் தயார் செய்து கல்முனை மேயர் உட்பட பல உயர்மட்ட அதிகாரிகள் அரசியல் தலைமைகளிடம் சமர்ப்பித்திருந்தது. இதற்கான அக்காலத்தைய மதிப்பீடு ருளுனு 7.0 ஆ ஆகும். 

இது தொடர்பாக பல கோரிக்கைகள் தொடாந்து விடுக்கப் பட்டபோதும் இது வரை எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே எதிர்காலத்தில் இத்திட்டத்தினை செயற்படுத்த கல்முனை மாநகர சபையும் காரைதீவு பிரதேச சபையும் இணைந்து செயற்பட வேண்டும்

இணைப்புகள்
தோணா அபிவிருத்திக்கு முன்னரும் பின்னருமான வரை படங்கள்
தோணாவின் தற்கால நிலை தொடர்பான புகைப் படங்கள்

( தகவல் உதவி:-  அல்-ஹாஜ் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் அவர்கள்)

No comments

Powered by Blogger.