நாட்டில் மீண்டும் சீரற்ற காலநிலை - மீனவர்களுக்கும் எச்சரிக்கை
நாட்டின் வடமேற்குப் பகுதியில் மீண்டும் மழை பெய்வதற்கும் நாட்டை சூழவுள்ள கடற்பரப்பில் கடும் காற்றுடன் கூடிய வானிலை நிலவுவதற்குமான சாத்தியங்கள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதனால் மன்னாரிலிருந்து கொழும்பு, காலி, பொத்துவில் வரையான கரையோரப் பகுதிகளுடன் தொடர்புடைய கடற்பரப்பும் ஆழ்கடல் பகுதியும் கொந்தளிப்புடன் காணப்படலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மணித்தியாலயத்திற்கு எழுபது கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதால் அது குறித்து விழிப்புடன் செயற்படுமாறு மீனவர்கள் மற்றும் கடல்சார் தொழில்ககளில் ஈடுபடுபவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. nf
Post a Comment