ஜித்தா இஸ்லாமிக் அபிவிருத்தி வங்கி ஊடாக இலங்கை மாணவருக்கு புலமைபரிசில்
இலங்கையில் உள்ள பல்கழைக்கழங்களில் பொறியியல், வைத்தியத்துறைகளில் பயிலும் வறிய முஸ்லீம் மாணவிகளுக்கு சவுதிஆரேபியாவின் உள்ள ஜித்தா இஸ்லாமிக் அபிவிருத்தி வங்கி ஊடாக முன்னாள் சபாநாயகரும் இஸ்லாமிய நிலையத் தலைவருமான எம்.எச்.முஹம்மத் தலைமையில் புலமைப்பரிசில் திட்டம் கடந்த 1983ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்படடு வருகின்றது.
மேற்படி மேலும் ஒரு தொகுதியினருக்கு புலமைப்பரிசில் திட்டம் நேற்று மாளிகாவத்தையில் உள்ள இஸ்லாமிய நிலையத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வின்போது சவுதி அரேபியாவின் தூதுவரலாய அதிகாரி சாலி அப்துல்லா அல் பராக் முன்னாள் கொழும்பு மாநகர முதல்வர் ஹூசைன் முகம்மத், இஸ்லாமிய நிலைய பணிப்பாளரும், முன்னாள் பிரதிப்பொலிஸ் மாஅதிபருமான எம். சுலைமான் ஆகியோரும் கலந்து கொண்டு பல்கழைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கி வைத்தனர்.
ஓவ்வொரு மாணவருக்கும் 240 அமேரிக்க டொலர் புலமைப்பரிசில் வழங்கப்பட்டது. இப் புலமைப்பரிசில் திட்டத்தினை வட கிழக்கு உற்பட பொறியியல் மற்றும் வைத்தியம், பல் வைத்தியர் ஆகிய துறைகளில் பயிலும் 53 மாணவர்களுக்கு இப் புலமைப்பரிசில் திட்டம் வழங்கப்பட்டது.
Post a Comment