ரவூப் ஹக்கீம் அவசரமாக நாடு திரும்புகிறார்
பலஸ்தீனத்தில் நடைபெறும் சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றிருந்த நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை காரணமாக அவசரமாக நாடு திரும்புகிறார்.
வியாழக்கிழமை (06) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் மாகாண சபைகள் தொடர்பான அரசியலமைப்பு திருத்தம் பற்றி கலந்துரையாடப்படவுள்ளதால், அதில் பங்குபற்றுவது மிகவும் அவசியமென அமைச்சர் ஹக்கீம் தீர்மானித்துள்ளதாலேயே உடனடியாக நாடு திரும்புவதற்கான முடிவை அவர் மேற்கொண்டார். அமைச்சரவைக் கூட்டத்தில் அதிகாரப் பகிர்வு பற்றியும் உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தினால் சிறுபான்மை சமூகங்களுக்கு ஏற்படக் கூடிய தாக்கங்கள் குறித்தும் அவர் கருத்துத் தெரிவிக்கவுள்ளார்.
அத்துடன், வியாழக்கிழமை (06) பிற்பகல் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள வடமாகாணத்தில் வசித்து, இடம்பெயர்ந்த மக்கள் அங்கு வாக்களிப்பதற்கு வகைசெய்யும் வாக்காளர்கள் பதிவு (விஷேட ஏற்பாடுகள்) சட்டத்தின் மீதும் அமைச்சர் ஹக்கீம் உரையாற்றவுள்ளார்.
டாக்டர்.ஏ.ஆர்.ஏ. ஹபீஸ்
ஊடகச் செயலாளர்
great.....
ReplyDeleteMuslim, Serupanmai Samukathukkak All
ReplyDeleteVada Makana Therlukkaka
Eruppai Pathukathu Kolluvathukku
Nadu Thierumpukienrar
==========Kalmunai Mohamed Fowse================
Huh...Why you are coming.... we sure You are going to lick MR's shoes, not for the benefit of Muslim Comunity. Very soon your mask will be removed.
ReplyDeleteSLMCFOWSE and who typing Tamil in English
ReplyDeleteplease your comments are unable to read and understand, so dowload any unicorn software to type in Tamil. find the link and download NHM Unicode writer.
http://software.nhm.in/products/writer
Mr. Ranees MHM
ReplyDeleteThanks for your Advise
Kalmunai Mohamed Fowse