முஸ்லிம் காங்கிரஸை நீக்குவது குறித்து ஜனாதிபதியே இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டும்
(Gtn) ஆளும் கட்சியிலிருந்து விலகப் போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் எம்.ரீ. ஹசன் அலி தெரிவித்துள்ளார். பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தங்களை உள்ளடக்காத காரணத்திற்காக ஆளும் கூட்டணியிலிருந்து விலகிக் கொள்ளும் உத்தேசம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆளும் கட்சியிலிருந்து விலகப் போவதில்லை எனவும், தம்மை கூட்டணியிலிருந்து நீக்குவது தொடர்பில் ஜனாதிபதியே இறுதித் தீர்மானம் எடுக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் தமது கட்சிக்கு பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்பதனை ஊடகங்கள் மூலம் அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், அரசாங்கத்தின் பின்னால் சென்று பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளுக்கு இடையில் மாறுபட்ட நிலைப்பாடுகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
நாங்க எவலவு அடிதாலும் தாங்குவமில்ல அதர்க்காக பத்விய துரப்பமா?????நாங்க யார் இதவிட பெரிசெல்லாம் எங்கலுக்கு தூசி
ReplyDeleteWe know you all shameless fellows, even he slapped with shores, you will be with government for your positions and personal benefits.
ReplyDelete