மாணவர்கள் தொழில் வாய்ப்பில் மத்திரம் இலக்கு வைப்பது சமூகத்திற்கு செய்யும் துரோகம்
(ரீ.கே.றஹ்மத்துல்லா)
மாணவ சமூகத்தினரின் கல்வி இலக்கு வெறுமனே பட்டத்தினையும், தொழில் வாய்ப்பினையும் கொண்டதாக இருக்குமாயின் அது சமூகத்திற்கு செய்யும் பெரும் துரோகமாகவே இருக்கும். குறிப்பாக பெண்கள் கல்வித்துறையில் அதீத அக்கறையுடன் செயற்பட்டு சமூகத்தை வழி நடத்தக் கூடியவர்களாக தம்மை ஆக்கிக் கொள்ள வேண்டும் என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை அல்-முனீறா பெண்கள் உயர் பாடசாலையில் இம்முறை தரம் ஜந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வில் இன்று (12)பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நல்லதொரு எதிர்கால சந்ததியினரை கட்டியெழுப்புகின்ற ஒரு முக்கிய இடமாக பாடசாலைகள் அமைகின்றன. அந்தவகையில் இப்பாடசாலையானது அதன் பணிகளை முறையாகவே மேற் கொண்டுவருவது இப்பாடசாலையின் சாதனைகள் சான்றாக அமைகின்றன. அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் சிறந்த புரிந்துனர்வுடனும், கூட்டுப் பொறுப்புடனும் செயற்பட்டு வருவது ஏனைய பாடசாலைகளக்கு முன்னுதாரணமாகவே அமையும்.
எந்தவொரு விடயமானாலும் சிறந்த திட்டமிடல், எதிர் கால இலக்கு போன்றன குறித்து செயற்படுவது அவசியமாகும். பாடசாலை மாணவர்கள் கல்வியோடு சிறந்த ஒழுக்க விழிமியங்களையும் கற்றுக் கொள்ள வேண்டியது இன்றய காலத்திற்கு மிக தேவைப்பாடானதொன்றாகும். மேலும் தனது சமூகம் சார்ந்த கலை, கலாசார பாரம்பரியங்களையும் அறிந்து கொள்ளகச்கூடிய சூழ் நிலைகளையும் பாடசாலைகள் ஏற்படுத்திக் கொள்வது முக்கியமாகும்.
இப்பாடசாலை அபிவிருத்தியில் தேசிய காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லாவும் நானும் குறிப்பிடதக்களவு பங்களிப்பச் செய்த வருகின்றோம். மேலும் இப் பாடசாலையில் கல்விப் பொதுத்தராதர உயர்தர விஞ்ஞானப் பிரிவையும் ஆரம்பித்து அதற்கான ஆசியர்களையும் நியமித்து வருகின்றோம். அட்டாளைச்சேனை பிரதேசத்தில் பெண் மாணவர்களுக்காக தனியாக அமைக்கப்பட்ட இப்பாடசாலையானது எதிர்காலத்தில் வரலாற்றுச் சாதனைகள் படைத்து சமூகத்திற்கு நல்ல சேவைகளை செய்யக்கூடியவர்களை உருவாக்க பாடுபடவேண்டும் என்றார். அதிபர் எம்.ஐ.எம். அப்துல் சலாம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் வலயக் கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசிம், கோட்டக்கல்விப்பணிப்பாளர் எம்.ஏ.சி. கஸ்ஸாலி, பிரதி அதிபர் எம்.எச்.எம். றஸ்மி மற்றும் கற்பித்த ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
Post a Comment