Header Ads



தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண சகல கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் - மஹிந்த


தேசிய பிரச்சினைக்கு நிறைவான அரசியல் தீர்வொன்றை காண அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். எம்மால் ஒரு தீர்வை இறக்குமதி செய்ய முடியாது. அரசியல் தீர்வு ராஜபக்ஷ - சம்பந்தன் ஒப்பந்தமாக அமையக்கூடாது என ஜனாதிபதி கூறினார்.

இலங்கை வந்துள்ள இந்திய பாரதீய ஜனதா கட்சி குழுவினர்  இன்று (07) மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.

இந்திய மாநிலங்களவையின் பிரதி எதிர்க்கட்சித் தலைவரும்- பாரதீய ஜனதாக் கட்சியின் முக்கியஸ்தருமான ரவி சங்கர் பிரசாத் தலைமையிலான் குழுவினர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். இலங்கையில் பயங்கரவாதத்தைத் தோற்கடித்தமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்திய தூதுக் குழுவினர் நன்றி தெரிவித்தனர்.

அத்துடன் தமது குழுவினர் யாழ்ப்பாணத்தில் நேரில் கண்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆச்சரியப்படக்கூடியதாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அரசியல் மற்றும் அரசாங்கம் என்பற்றுக்கும் அப்பால் இந்தியா என்றும் இலங்கையின் நண்பனே என்றும் ரவி சங்கர் பிரசாத்; தெரிவித்தார்.

இச்சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்- ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.