சவூதி அரேபியாவில் இப்படியும் சில சம்பவங்கள்..!
(தமிழில் ரமீஸ் - ஆங்கிலத்தில் அரப் நியூஸ்)
எந்தவிதமான ஆதரவுமற்ற 6 குழந்தைகளின் தாயான சவூதியை சேர்ந்த பெண்மணி ஒருவர் வழக்கு தாக்கல் ஒன்றை முன்வைத்துள்ளார். அதில் தனது குடும்பத்திற்கு தேவையான உணவு, உடை,மற்றும் கல்வி போன்ற தேவைகளை முன்வைத்துள்ளார்.
50 வயதான உம்மு முஹம்மது என்பவரே அரபு செய்தி நிறுவனமொன்றுக்கு தொலைபேசி மூலம் தனது நிலைமையினை தெரிவித்துள்ளார். சுமார் 8 வருடங்களின் முன் தனது கணவரால் எவ்வித ஆதரவுமற்ற நிலையில் கைவிடப்பட்ட அவருக்கு 4 பெண்குழந்தைகளும் 2 ஆண்குழந்தைகளும் உள்ளனர். இவர்களை தனது சொந்த முயற்சியால் பராமரித்து வந்துள்ளார். இதில் அவரது கடைசி ஆண் குழந்தை மூளை பக்கவாதத்தினால் பீடிக்கபட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
இவரது குடும்பம் 3 அறைகளும் ஒரு வரவேற்பறையும் கொண்ட ஒரு வீட்டில் சுஹதா கட்டிட தொகுதி எனப்படும் பாழடைந்த பகுதியில் வசித்து வருகிறார்கள் என அரபு இணையத்தளமொன்றின் தொடர்பின் மூலம் அறிய முடிந்தது. இந்த பகுதியில் வசிக்கும் அக்கம்பக்கத்தினர் இவர்களது வீட்டின் உட்பகுதியை காணும் முறையில் வீட்டின் அமைப்பு உள்ளது.
"8 வருடங்களின் முன் எனது கணவர் எங்களை விட்டு சென்று, அவர் மதீனாவில் முக்கியமான அரச தொண்டு நிறுவனமொன்றில் பணி புரிகிறார்" என்று கூறினார் அந்த பெண்மணி.
அவர் விவாகரத்து சொன்ன மறு கணமே வீட்டை விட்டு வெளியேறினார். இது எனக்கு நிச்சயமற்ற தன்மையை உண்டு பண்ணியது. ஏனெனில் இதுவரை விவாகரதிட்குறிய எந்தவிதமான தஸ்தாவேஜுகளும் எனக்கு கிடைக்கவில்லை. ஆகவே நான் எனது பிள்ளைகளுக்காக உழைப்பதை நிறுத்தினேன். அது எனக்கு ஒரு வரிச்சுமை ஆனது. எனது தந்தையினை அணுகி அவரை என் பிள்ளைகளுக்கு உதவுமாறு வற்புறுத்தவும் முடியாது.
எனது மகன் யூஸுப் மூளை பக்கவாதம் நோயினால் அவதிபடுகிறான்.அவனது வைத்தியச் செலவொ என் சுமைக்கு அப்பாற்பட்டது.அரச வைத்தியசாலைகளிலும், தனியார் மருத்துவ நிலையங்களிலும் கையேந்திய நிலையில் என் வாழ்நாள் கழிகிறது. சமூக விவகார அமைச்சு தரும் மாதாந்தம் 1500 றியால் எனது அடிப்படை தேவைகளுக்கு போதாது. இந்த பணத்திலிருந்து நான் எனது குடும்பத்திற்கு செலவழிப்பதை கூட சொல்ல விரும்பவில்லை. ஏனெனில் எனக்கு வேறு வருமானம் ஏதும் இல்லை.
அதிகரித்த பொருளாதார செலவினால், குறைந்த வருமானமுள்ள மக்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் மக்கள் கஷ்டபடுகிறார்கள்.ஆகவே நீங்கள் யூகிக்கலாம், என்னைப் போன்ற வருமானமற்றவர்களின் வாழ்க்கை எங்கே இட்டுச் செல்லும் என்று??
மற்ற பிள்ளைகளை போன்று எனது பிள்ளைகளும் பாடசாலைகளுக்கு செல்ல வேண்டும், பூங்காக்களில் விளையாட வேண்டும், சந்தைகளுக்கு (சொப்பிங்) செல்ல வேண்டும் என்பது என் குழந்தைகளின் கனவு???..அபிலாஷைகள் ??...எனது 11 வயதான மகன் யூஸுப் பாடசாலைக்கு செல்ல முடியாது. ஏனெனில் அவ்னான் வெளியில் செல்லும் போதெல்லாம் அவன் அவனது அங்கவீனமுற்ற இளைய சகோதரனையும், மற்றைய சகோதரிகளையும் கண்காணிக்க வேண்டும்.
கடந்த 8 வருடங்களில் வெளியே இருக்கும் எனது கணவனாகிய இவர்களது தகப்பன் இதுவரை ஒரு தொலைபேசி அழைப்பு முலம் தொடர்பு கொண்டு பிள்ளைகளின் சுகதுக்கங்களை விசாரிக்கவும் இல்லை.
இவ்வாறு அரபு இணையதளத்தின் நேர்காணலின் பொது அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அப்போது அவரின் வீட்டு சொந்தக்காரர் கடந்த மாதங்களின் வீடு வா டகையினை உரிமையுடன் கோரினார். அது வருடத்திற்கு 10000 றியாள்.ரமலான் மாதம் வரை தவணை கொடுத்துள்ளார். அதன் பிறகு வீட்டினை காலி செய்தாக நேரும்.
எனக்கு தெரிந்த அநேக அரச தொண்டு நிறுவனங்கள் எங்களை போன்ற ஏழை மக்களுக்கு உதவுகிறார்கள். ஆனால் அது எங்களுக்கு அல்ல என்று சொல்கிறது அவர்களது தெரிவு" என்கிறார் இந்த பரிதாபகரமான பெண்மணி.
MARRIAGE AND DIVORCE ARE NORMAL PRACTICE AND STANDARD OF SAUDI'S LIFE......THIS KIND OF STORIES ARE COUNTLESS IN SAUDI ARABIA.
ReplyDelete'பெண்களை ஆண்களுக்கு கீழாக வைத்திருப்பதன் மூலம் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளோம்' என்று வாய்கிழிய உபதேசம் புரிபவர்கள் இப்படியானவற்றை விளக்கினால் நல்லது.
ReplyDeleteO ho inda maamiyum yahoodi nasaarakkalin adiyaal endru urudi seyduwittal
DeleteSaudiyil vivaaharaththup petra pala pilleyhal irukkum pengalayum manam mudikka mun varuhira maappilley athiham irukkiraarhal. shiriya mahar koduththu shari yaarayaavathu oru penney mudikka thudikkum maappilley athihamaaha angu irukku. Ippotheyke palar vinnappiththu iruppaarhal panam ulla silarum 3noodu 4aaha irukkattum enru mudikka mun varuvaarhal. pengalukku angu thirumanam mudikka kashtam illey.
ReplyDeletePala thadavey Vivaharaththu petru meendum meendum Pala thirumanam mudiththu vivaaharahathu petra ovvoru thadavayum pala pilley haludan meendam pengaley manam mudikkum naadu athu.