Header Ads



புத்தளம் பிரதேச செயலாளர் மலிக் மீது தாக்குதல் - கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்



(அபூ நாதில்)

புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம். மலிக்,  புத்தளம் பிரதேச செயலக வாகன சாரதி  ஆகியோர் தாக்கப்பட்டதைக் கண்டித்து புத்தளம் பிரதேச செயலக ஊழியர்கள் புத்தளம் பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.   

மதுரகம பிரதேசத்தில் யானையொன்றின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர்  மரணமடைந்துள்ளார். மரணித்தவரின் உடலை வீதியில் வைத்து இன்று காலை புத்தளம் -  குருநாகல் வீதி கல்லடி சந்தியில் ஆர்ப்பாட்டமொன்று இடம் பெற்றது.  ஆர்ப்பாட்டம் இடம் பெற்ற இடத்திற்கு சென்ற  புத்தளம் பிரதேச செயலாளரையும்   புத்தளம் பிரதேச செயலக வாகன சாரதியையும் அவ்விடத்திலிருந்தவர்கள் தாக்கியுள்ளனர். தாக்கதலுக்குள்ளான  புத்தளம் பிரதேச செயலாளரும் வாகன சாரதியும்  புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



No comments

Powered by Blogger.