யாழ்ப்பாண முஸ்லீம் வட்டார வீதிகளின் அவலம் தொடருகிறது
(பாறூக் சிகான்)
யாழ் மாநகர சபைக்குட்பட்ட முஸ்லீம் வட்டார வீதிகள் பல இன்றுவரை திருத்தப்படவில்லை. இதன் காரணமாக அவை குன்றும் குழியுமாக காணப்படுகிறது.
யாழ் மாநகர சபை தனது ஆளுகைக்குட்பட்ட பல உள்ளக வீதிகளை கொங்கிறீட்,காபெட் இட்டு சீர்செய்து வந்தது. ஆனால் இன்றுவரை காதிஅபூபக்கர் வீதியை தவிர ஏனைய வீதிகள் கைவிடப்பட்டுள்ள நிலைமையை காணமுடிகிறது.
மேலும் சில வீதிகள் போக்குவரத்து செய்ய முடியாத நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் பிரதானமாக பாவிக்கின்ற ஜின்னா வீதி,ஆஸாத் வீதி,கமால் வீதிகள் மிக மோசமான நிலையில் உள்ளன. இப்பிரதேசத்தை பிரதிறிதித்துவப்படுத்தி 5 மாநகர சபை உறுப்பினர்கள் இருந்தும் எதுவித பிரயோசனம் இல்லை என்பது மக்களின் கருத்தாகும்.
Post a Comment