Header Ads



'அமெரிக்காவின் ராணுவ பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்டவரை மன்னிக்க முடியாது'

அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் அதிகாரி ஸ்நோடென், 'இணைய தளங்களில் ஊடுருவி அமெரிக்கா உளவு வேலை பார்க்கிறது' என்று பகிரங்கமாக தகவல் வெளியிட்டார். இதையடுத்து அவரை கைது செய்ய அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. இதற்கிடையில் அவர் அமெரிக்காவில் இருந்து தப்பி, ஹாங்காங்கில் தஞ்சம் அடைந்தார். அதன் பிறகு அவர் மாஸ்கோ வழியாக கியூபா அல்லது வெனிசுலாவுக்கு தப்ப முயன்றார். இந்நிலையில், அவருக்கு அரசியல் தஞ்சம் அளிக்க ஈக்வடார் அரசு பரிசீலித்து வருகிறது. 

இதுகுறித்து ஈக்வடார் அரசு தூதர் தெரிவிக்கையில், 'அரசியல் தஞ்சம் குறித்த விவகாரத்தில் சர்வதேச சட்டங்களுக்கும், ஈக்வடாரின் விதிமுறைகளுக்கும், மனித உரிமை விதிகளின்படியும் பரிசீலிக்கப்படும். அதன்பிறகு ஸ்நோடென்னுக்கு தஞ்சம் அளிப்பது பற்றி முடிவெடுக்கப்படும். அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விரிவான அறிக்கையை அமெரிக்காவிடம் கேட்டுள்ளோம்' என்றார். பரபரப்பான சூழ்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அமெரிக்காவின் ராணுவ பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்ட ஸ்நோடென்னை மன்னிக்க முடியாது. 

அதே சமயம் மாஸ்கோ விமான நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ள அவரை கொண்டுவர அமெரிக்காவின் விமான படை விமானத்தை அனுப்ப இயலாது. சட்டத்தின் வழிமுறைகளின்படி இந்த விவகாரம் கையாளப்படும். இந்த விவகாரத்தில் ரஷ்யா, சீனாவின் நடவடிக்கைகள் அதிருப்தி அளிக்கின்றன' என்று கூறியுள்ளார். இதனால் அந்த நாடுகளுடன் நட்புறவு பாதிக்குமா என நிருபர்கள் கேட்டதற்கு, 'ஒரு சில நடவடிக்கைகளை வைத்து இரு நாடுகளுடனான நட்புறவை துண்டித்து கொள்ள முடியாது. ஆனால் இந்த விவகாரத்தில் இருநாடுகளும் ஒத்துழைப்பு அளித்திருக்க வேண்டும்Õ என்று ஒபாமா கூறினார்.

1 comment:

  1. அது அமெரிக்க இராணுவ இரகசியமல்ல பெருச்சாளியே, அது அமெரிக்காவின் அக்கிரமச்செயல்களும் அசிங்கத்தனமான் செயல்களும்தான். நீங்கள் செய்தால் அது இரணுவ நடவடிக்கை மற்றவன் செய்தால் அது கண்டிக்கத்தக்க செயலும் அத்துமீறலும். போங்கடா நீங்களும் ஒங்கட பொய்யான தலைமைத்துவமும் இதவிட நீ வெளிப்படையாவே வேற தொழில் செய்யலாம். வந்திட்டார் தீர்ப்புசொல்லுறதுக்கு.

    ReplyDelete

Powered by Blogger.