Header Ads



ஆதரித்து வாதிடல் தொடர்பாக முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி முன்னணி நடாத்திய பயிற்சிநெறி


(அப்துல் அஸீஸ்)

ஆதரித்து வாதிடல் தொடர்பாக  முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியினால் நடாத்தப்பட்ட பயிற்றுவிப்பாளருக்கான பயிற்சிநெறி   முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் இடம்பெற்றது.

பெண்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆதரித்து வாதிடல் தொடர்பான இச்செயலமர்வில் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களைச்சேர்ந்த துறைசார் 30பயிற்றுவிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எஸ்.ஜலீல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  அஷ்ஷெய்க் ரவூப் ஸெய்ன் கலந்துகொண்டார்.


No comments

Powered by Blogger.