Header Ads



சட்டவிரோத ஆட்கடத்தலை கட்டுப்படுத்த பேச்சுவார்த்தை


சட்டவிரோத ஆட்கடத்தலை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையே பேச்சு வார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.

அவுஸ்ரேலிய உயரதிகாரிகளுக்கும், பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸவுக்கும் இடையே, இந்த கலந்துரையாடல் நேற்று பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கருத்து வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர், சட்டவிரோத ஆட்கடத்தலை கட்டுப்படுத்த, ஆட்கடத்தலில் ஈடுப்படுவோருக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

ஆட்கடத்தல் நடவடிக்கையானது தற்போது மிகவும் இலாபம் தரும் சட்டவிரோத செயலாக காணப்படுவதாகவும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.


1 comment:

  1. முதலில் சட்டவிரோதமாக நீங்கள் செய்யும் காரியங்களை நிறுத்துங்கள் பின்பு மற்றதை யோசிக்கலாம் நமது நாட்டிலுள்ள வழங்களுக்கு நம் நாட்டு மக்கள் கஸ்டப்படாமலே இருந்து சாப்பிடக்கூடிய வழங்கள் உள்ள நாடு இலங்கை, உங்களைப்போல கொள்ளைக்காரர்களின் கைக்கு வந்ததிலிருந்து நாட்டைவிட்டு மக்கள் தப்பி ஓடிக்கொண்டிருக்கின்றார்கள். நீயெல்லாம் சட்டவிரோதத்தைப்பற்றி பேசுமளவிற்கு உள்ளது தூ...

    ReplyDelete

Powered by Blogger.