ஹங்வெல்லை பகுதியில் பௌத்த, கிறிஸ்தவ மோதல் - மௌலவி மத்தியஸ்தம்
கொழும்பை அண்மித்த ஹங்வெல்லை பகுதியில் பௌத்த மதகுரு ஒருவருக்கும், கிறிஸ்தவ போதகர் ஒருவருக்கும் இடையிலான மோதலை அடுத்து பிரதேசத்தில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 23-06-2013 ஹங்வெல்ல பிரதேசத்தில் உள்ள பௌத்த விகாரை ஒன்றின் அருகில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் ஞாயிறு விசேட ஆராதனைகள் நடைபெற்றுள்ளது.
அப்போது அவ்விடத்துக்கு வந்த அருகிலுள்ள பௌத்த விகாரையின் மதகுரு, கிறிஸ்தவ ஆராதனைகளை நிறுத்துமாறு கண்டித்துள்ளார். இதனையடுத்து இருதரப்புக்கும் இடையில் வாக்குவாதங்கள் முற்றி, அடிதடி வரை நிலைமை மோசமடைந்துள்ளது. பௌத்த மதகுருவும், கிறிஸ்தவ போதகரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.
இந்த மோதலை அடுத்து ஹங்வெல்ல பகுதியில் பௌத்த மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கிடையில் கடும் பதற்ற நிலை உருவெடுத்துள்ளது.
இதற்கிடையே ஹங்வெல்ல பிரதேசத்தின் இஸ்லாமிய மதத்தலைவரான மௌலவி ஒருவர் பொலிசாரின் வேண்டுகோளை அடுத்து, பௌத்த- கிறிஸ்தவ தரப்புகளை சமாதானப்படுத்தி, நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாகவும் அறியக் கிடைத்துள்ளது.
NICE NEWS!
ReplyDeleteகடவுள் = கடவுள் but துறவி Vs துறவி
ReplyDeleteFrom the beginning of child's education, Aqeedha must be taught then when they grow up they never make anything, which is contrary to the aqeedha. If anyone's amal is not complete but he or she is right in aqeedha, Allah may excuse but if we are not perfect in aqeedha although we do amal perfectly Allah will not excuse us. I had to comment on this point due to the comment of some of the readers of jafnamuslim, whose comments goes sometimes beyond the limit of aqeedha.
ReplyDelete