Header Ads



தன் சாதனைக்கு துணைபுரிந்த முஸ்லிம் ஆசிரியரை போற்றிபுகழும் தமிழ் மாணவன் (படம்)


(எஸ்.அஷ்ரப்கான்)

இலங்கை சமூக முன்னேற்ற ஆய்வு அமையத்தின் ஏற்பாட்டில் அம்பாரை மாவட்டத்தில் இம்முறை உயர்தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான 'பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெறுவது எவ்வாறு ?  என்பது தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு அமைப்பின் தலைவரும் சட்டத்தரணியுமான றினோஸ் ஹனீபாவினால்  கல்முனை அல்- மிஸ்பாஹ் வித்தியாலயத்தில் (25-06-2013) நடைபெற்றது.

இதில் அம்பாரை மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 150 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கெண்டனர்.

இந்நிகழ்வின்போது, விசேடமாக சம்மாந்துறையைச்சேர்ந்த சோமசுந்தரம் வினோஜ் குமார் என்ற மாணவன் அன்மைக்காலமிருந்து பாடசாலைப்பருவத்தில் தனது அயராத முயற்சியால் பல விஞ்ஞான கண்டுபிடிப்புக்களை கண்டுபிடித்து தேசிய மட்டத்தில் பல்வேறு பரிசில் களைப்பெற்றுக்கொண்டுள்ளார். இவர் தற்போது சது- கோரைக்கல் வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் கல்வி கற்றுக்கொண்டிருக்கிறார்.

இவரது முயற்சியைப்பாராட்டி இலங்கை சமூக முன்னேற்ற ஆய்வு அமையம் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்தது. இந்த சந்தர்ப்பத்தில் அம்மாணவனால் தெரிவிக்கப்பட்ட கருத்து முஸ்லிம் சமூகத்திற்கு  கௌரவத்தை ஏற்படுத்தியிருந்தது. அதாவது, இந்து சமய மாணவனான எனது இந்த சாதனை நோக்கிய முயற்சிகளுக்கு சாய்ந்தமருதைச் சேர்ந்த ஆசிரியர் முஹம்மட் ஆரிப் அவர்கள் ஒரு முஸ்லிம் சமயத்தைச் சேர்ந்த கௌரவ ஆசிரியராக இருந்தாலும் எனக்கு மிகவும் பக்கபலமாக இருந்தார்கள். அவரை எனது தாய் தகப்பனுக்கு அடுத்தபடியாக என்றும் நான் நினைவு கூர்வேன் என்று குறிப்பிட்டிருந்தார்.


No comments

Powered by Blogger.